/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
மூலக்காடு மலைக்கிராமத்தில் மக்கள் 'சோகப்பாட்டு' இரவானால் மிரட்டுது இருட்டு... சலிச்சுப்போச்சு பஸ் வசதி கேட்டு

ADDED : அக் 13, 2025 01:14 AM

தொண்டாமுத்தூர்:மோளப்பாளையம், மூலக்காட்டில் உள்ள மலைவாழ் மக்கள், மின்சாரம், பஸ் வசதி போன்ற அடிப்படை வசதிகள் இல்லாமல் தவித்து வருகின்றனர்.
கோவை, பூலுவப்பட்டி பேரூராட்சிக்குட்பட்ட மோளப்பாளையம், மூலக்காடு மலை கிராமத்தில், சுமார், 30 குடும்பத்தினர் வசிக்கின்றனர். இப்பகுதி மக்கள், தோட்டங்களில் கூலி வேலை செய்து வருகின்றனர்.
இவர்களது வீடுகளுக்கு மின் இணைப்பு இல்லாததால், சூரிய சக்தி விளக்குகளை பொருத்தி உள்ளனர். அவ்விளக்குகளும் பழுதடைந்துள்ளதால், இரவானால் இருளில் தவிக்கின்றனர்.
இம்மக்களின் குடியிருப்பு பகுதியில் தார் சாலை அமைக்கப்பட்டிருந்தும், இப்பகுதிக்கு பஸ் வசதி ஏற்படுத்தாததால், மூலக்காடு மக்கள், இரண்டு கி.மீ., நடந்து சென்று, மோளப்பாளையத்தில் பஸ் ஏறி செல்ல வேண்டியது உள்ளது.
இங்குள்ள மக்களில் சிலருக்கு மட்டுமே, ரேஷன் கார்டு உள்ளது. மற்றவர்கள், ரேஷன் கார்டுக்கு விண்ணப்பித்து ஆண்டுகளாகின்றன. இன்னும் கிடைக்காததால், ரேஷன் பொருட்களை வாங்க முடியாமல் உள்ளனர்.
ரேஷன் கார்டு உள்ள மக்கள், பஸ் வசதி இல்லாததால், 3 கி.மீ., தொலைவில் உள்ள வடிவேலாம்பாளையத்தில் உள்ள ரேஷன் கடைக்கு நடந்து சென்று, பொருட்களை வாங்கி வருகின்றனர்.
வடிவேலம்பாளையத்தில் உள்ள அரசு நடுநிலைப்பள்ளியில், எட்டாம் வகுப்பு வரை படிக்கும், மூலக்காடு மாணவர்கள், பஸ் வசதி இல்லாததால் உயர்படிப்புக்கு ஆலாந்துறை சென்று படிக்க முடியாமல், படிப்பை பாதியிலேயே நிறுத்தியுள்ளனர்.
மலையடிவாரம் என்பதால், இரவு, 8:00 மணிக்கு மேல் காட்டு யானைகள் அச்சுறுத்தல் வேறு. மின்சாரம், பஸ் வசதி, ரேஷன் கார்டு போன்ற வசதிகள் இல்லாமல் தவிக்கும் மூலக்காடு மலைவாழ் மக்களின் துயர்துடைக்க, மாவட்ட நிர்வாகம் முன்வர வேண்டும்.