/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
குழாய் பதித்த இடங்களில்... சாலையெல்லாம் குழி!கண்டித்து கவுன்சிலர் மறியல்
/
குழாய் பதித்த இடங்களில்... சாலையெல்லாம் குழி!கண்டித்து கவுன்சிலர் மறியல்
குழாய் பதித்த இடங்களில்... சாலையெல்லாம் குழி!கண்டித்து கவுன்சிலர் மறியல்
குழாய் பதித்த இடங்களில்... சாலையெல்லாம் குழி!கண்டித்து கவுன்சிலர் மறியல்
UPDATED : மார் 16, 2024 01:36 AM
ADDED : மார் 15, 2024 11:50 PM

கோவை:குடிநீர் குழாய் பதித்த இடங்களில் 'கான்கிரீட்' ரோடு அமைக்குமாறு, பொக்லைன் இயந்திரம் முன் அமர்ந்து கவுன்சிலர் முற்றுகையிட்டதால், பரபரப்பு ஏற்பட்டது.
கோவை மாநகராட்சியின் பழைய, 60 வார்டுகளில், 24 மணி நேர குடிநீர் திட்ட பணிகளை சூயஸ் நிறுவனம் மேற்கொண்டு வருகிறது.
வீடுகளுக்கு குழாய் இணைப்பு, சாலைகளில் பிரதான குழாய் பதிப்பு போன்ற பணிகளை, இந்நிறுவனம் மேற்கொண்டு வருகிறது.
பணிகள் இழுபறியால், ரோடு போடும் பணிகள் பாதிக்கப்படுகின்றன. குழிகளை மூடாததால் விபத்து ஏற்படுவதாக, மண்டல கூட்டங்களில் கவுன்சிலர்கள் புலம்பி வருகின்றனர். இதனால், அதிகாரிகளுடன் வாக்குவாதமும் ஏற்பட்டு வருகிறது.
இந்நிலையில், வடக்கு மண்டலம், 18வது வார்டு நல்லாம்பாளையம், அன்னையப்பன் வீதியில் குடிநீர் திட்ட பணிகளை மேற்கொள்ள, பொக்லைன் இயந்திரம் கொண்டு வரப்பட்டது.
இதன் முன் வழிமறித்து அமர்ந்த, அந்த வார்டு கவுன்சிலர் ராதாகிருஷ்ணன்(கொ.ம.தே.க.,) பணிகள் முடிக்கப்பட்ட இடத்தை, 'வெட்மிக்ஸ்' கொண்டு மூடிய பின், மற்ற ரோடுகளை தோண்டுமாறு வலியுறுத்தினார்.
கவுன்சிலர் ராதாகிருஷ்ணன் கூறுகையில், ''நல்லாம்பாளையம் பகுதியில், 40 இடங்களில் குழாய் பதிக்க குழி தோண்டப்பட்டு, 10 நாட்களுக்கு மேல் ஆகிறது. இதுவரை 'வெட்மிக்ஸ்' கொண்டு மூடப்படாததால், பள்ளி அருகே குழந்தைகள், பெற்றோர் விபத்துக்குள்ளாகின்றனர். உடனடியாக 'வெட்மிக்ஸ்' நிரப்பி, கான்கிரீட் சாலை அமைக்காததே காரணம்,'' என்றார்.
இதையறிந்து அங்கு வந்த வடக்கு மண்டல உதவி கமிஷனர் ஸ்ரீதேவி, நிர்வாக பொறியாளர் எழில், உதவி பொறியாளர் இளங்கோ ஆகியோர், கவுன்சிலருடன் பேச்சுவார்த்தை நடத்தினர். பின்பு, கள ஆய்வு செய்து உடனடியாக குழிகளை மூட உத்தரவிட்டதையடுத்து, பணிகள் தொடர்ந்து நடந்து வருகின்றன.

