/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
மேம்பாலத்தில் சரிவர ஒளிராத மின்விளக்குகள்
/
மேம்பாலத்தில் சரிவர ஒளிராத மின்விளக்குகள்
ADDED : ஆக 28, 2025 05:46 AM

கிணத்துக்கடவு; கிணத்துக்கடவு, மேம்பாலத்தின் கீழ் மின் விளக்குகள் முழுமையாக எரியாததால், மக்கள் அவதிப்படுகின்றனர்.
கிணத்துக்கடவு மேம்பாலத்தின் கீழ், அதிகப்படியான வாகனங்கள் சென்று வருகின்றன. இதில், இரவு நேரத்தில் பெரும்பாலான நாட்களில் மேம்பாலத்தின் கீழ் பகுதியில் உள்ள மின் விளக்குகள் முழுவதுமாக எரிவதில்லை.
ஒவ்வொரு மேம்பால தூண்கள் இடைவெளியில் ஒன்று அல்லது இரண்டு மின் விளக்கு மட்டுமே எரிகிறது. இதனால், இரவு நேரத்தில் போதிய வெளிச்சம் இல்லாமல் இருளாக காணப்படுகிறது.
ஒரு சில நாட்கள், புது பஸ் ஸ்டாண்ட் முதல் போலீஸ் ஸ்டேஷன் வரை மின் விளக்கு எரியாததால், மக்கள் பஸ் ஸ்டாண்ட் பகுதியில் நிற்க அச்சப்படுகின்றனர். எனவே, மேம்பாலத்தின் கீழ் பகுதியில், இரவு நேரத்தில் அனைத்து மின்விளக்குகளும் எரிவதை தேசிய நெடுஞ்சாலைத்துறையினர் உறுதிப்படுத்த வேண்டும்.