UPDATED : செப் 18, 2026 04:46 PM
ADDED : செப் 18, 2026 04:42 PM
அ நிறம் | அளவு
கோவை:
சின்னவேடம்பட்டியில் உள்ள தவத்திரு ராமனந்த சுவாமிகள் மேல்நிலை பள்ளி முன்னாள் மாணவர்கள் சங்க அலுவலகம் திறப்பு விழா நேற்று நடந்தது.
சிரவை ஆதின வளாகத்தில் உள்ள டி.ஆர்.ஏ பள்ளி முன்னாள் மாணவர்கள் பயன்பெறும் வகையில், பள்ளி வளாகத்தில் சங்க அலுவலகம் துவங்கப்பட்டுள்ளது. குமரகுருபர சுவாமிகள் திறந்து வைத்தார். செயலாளர் காந்தி, துணை செயலாளர் ராஜேந்திரன், இணை செயலாளர் மோகனகிருஷ்ணன், முன்னாள் தலைமை ஆசிரியர் சம்பத்குமார், 1977 -79 ஆண்டில் படித்த மாணவர்கள் பங்கேற்றனர். பள்ளியின் முன்னேற்றத்துக்கு உதவி செய்ய உறுதியேற்றனர்.
