ADDED : ஏப் 08, 2025 05:52 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கோவை; கோயமுத்தூர் டிராவல் ஏஜென்ட் அசோசியேஷனின், 5வது நிர்வாகிகள் பதவியேற்பு நிகழ்ச்சி, ரெசிடென்சி டவர்ஸ் ஹோட்டலில், நேற்று நடந்தது.
இவ்விழாவில், இந்திய தொழில் வர்த்தக சபையின் தலைவர் ராஜேஷ் மற்றும் கொடிசியா தலைவர் கார்த்திகேயன் ஆகியோர், சிறப்பு விருந்தினர்களாக பங்கேற்று, புதிய நிர்வாகிகளுக்கு வாழ்த்துக்களை தெரிவித்தனர்.
கோயமுத்தூர் டிராவல் ஏஜென்ட் அசோசியேஷனின் புதிய தலைவராக செல்வராஜூ, செயலாளர் விஷ்ணு வசந்த்குமார், பொருளாளர் பிரஜேஷ் ஆகியோர், புதிய நிர்வாகிகளாக பதவியேற்றுக் கொண்டனர்.

