/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
வளர்ச்சித் திட்ட பணிகள் துவக்க விழா
/
வளர்ச்சித் திட்ட பணிகள் துவக்க விழா
ADDED : அக் 23, 2024 10:35 PM

பெ.நா.பாளையம்: கூடலூர் நகராட்சிக்கு உட்பட்ட பல்வேறு பகுதிகளில் மேற்கொள்ளப்படும் வளர்ச்சி திட்ட பணிகளுக்கான துவக்க விழா நடந்தது.
பெரியநாயக்கன்பாளையம் அருகே கூடலூர் நகராட்சி உள்ளது. இங்கு பொது நிதியில், 6வது வார்டு ராஜ் நகர் பகுதி மற்றும், 5வது வார்டு முருகன் லே-அவுட் பகுதி, 3வது வார்டு திருமலை நாயக்கன்பாளையம் பகுதி ஆகிய இடங்களில், 20 லட்சம் ரூபாய் மதிப்பிலும், இரண்டாவது வார்டு வட்டப்பாறை மேடு பகுதியில்,16 லட்சம் மதிப்பிலும், 20 வது வார்டு சாமையன் நகர் பகுதியில், 10 லட்சம் ரூபாய் மதிப்பிலும் புதிய தார் சாலைகள் அமைக்கப்பட உள்ளன.
சாமையன் நகரில் நடந்த துவக்க விழா நிகழ்ச்சியில், நகராட்சி தலைவர் அறிவரசு பணிகளை துவக்கி வைத்தார். நிகழ்ச்சியில், நகராட்சி துணைத் தலைவர் ரதி ராஜேந்திரன், கவுன்சிலர்கள் சித்ரா, கவுசிக், ரம்யா, ரேவதி மற்றும் நகராட்சி அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

