/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
மாவட்ட கூடைப்பந்து சிறுவர் பிரிவு துவக்கம்
/
மாவட்ட கூடைப்பந்து சிறுவர் பிரிவு துவக்கம்
ADDED : பிப் 22, 2024 05:48 AM

கோவை: மாவட்ட அளவிலான கூடைப்பந்து போட்டியின், மினி பாய்ஸ் மற்றும் சிறுமியர் பிரிவு போட்டிகள் துவங்கின.
லயன்ஸ் கிளப் ஆப் கோயம்புத்துார் ஓரியன் மற்றும் லயன்ஸ் கிளப் ஆப் கோவை காட்டன் சிட்டி சார்பில், 14ம் ஆண்டு லயன்ஸ் ஓரியன் கோப்பைக்கான, மாவட்ட அளவிலான கூடைப்பந்து போட்டி, நேரு ஸ்டேடியம் அருகில் உள்ள, கூடைப்பந்து மைதானத்தில் நடக்கிறது.
இதில் சிறுவர், சிறுமியர், ஆண்கள், பெண்கள் ஆகிய பிரிவுகளிலும், 30+, 50+, 60+ ஆண்களுக்கு மூவர் கூடைப்பந்து போட்டியும் நடத்தப்படுகின்றன.
பள்ளி மாணவர்களுக்கான, சிறுவர் - சிறுமியர் பிரிவு போட்டிகள், நேற்று முன்தினம் மாலை துவங்கின. சிறுவர் பிரிவு முதல் சுற்றுப்போட்டியில், பாரதி பள்ளி அணி 40 - 27 என்ற புள்ளிக்கணக்கில், டெக்சிட்டி கூடைப்பந்து கிளப் அணியையும், பி.எஸ்.ஜி., சர்வஜனா பள்ளி அணி 48 - 8 என்ற புள்ளிக்கணக்கில், பீபாள் பள்ளி அணியையும் வீழ்த்தின.
சிறுமியர் பிரிவில், யுனைடெட் கூடைப்பந்து கிளப் அணி, 36 - 26 என்ற புள்ளிக்கணக்கில் எஸ்.வி.ஜி.வி., பள்ளி அணியையும், பாரதி பள்ளி அணி 36 - 17 என்ற புள்ளிக்கணக்கில், அல்வேர்னியா 'பி' அணியையும் வீழ்த்தின.