/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
மாவட்ட அளவிலான கால்பந்து:சி.ஐ.டி., கல்லூரியில் துவக்கம்
/
மாவட்ட அளவிலான கால்பந்து:சி.ஐ.டி., கல்லூரியில் துவக்கம்
மாவட்ட அளவிலான கால்பந்து:சி.ஐ.டி., கல்லூரியில் துவக்கம்
மாவட்ட அளவிலான கால்பந்து:சி.ஐ.டி., கல்லூரியில் துவக்கம்
ADDED : மார் 15, 2024 12:21 AM

கோவை:மாவட்ட அளவிலான 'பி' டிவிஷன் கால்பந்து போட்டிகள் சி.ஐ.டி., கல்லுாரி மைதானத்தில் நேற்று துவங்கின.
கோவை மாவட்ட கால்பந்து சங்கம் சார்பில் மாவட்டத்தில் கால்பந்து விளையாட்டை மேம்படுத்த பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. அதன் ஒரு பகுதியாக வீரர்களுக்கு லீக் போட்டிகள் நடத்தப்படுகின்றன.
முதலாவதாக, 'சி' டிவிஷன் லீக் போட்டிகள் நவக்கரை ஏ.ஜே.கே., கல்லுாரியில் நடந்தது. இதில் காட்டூர் ரீகிரியேஷன் கிளப் சாம்பியன் கோப்பை வென்றது. தொடர்ந்து 'பி' டிவிஷன் போட்டிகள் சி.ஐ.டி., கல்லுாரியில் நடத்த திட்டமிடப்பட்டு நேற்று துவங்கின.
பி டிவிஷனில், கே.ஆர்.வி., எப்.சி., பீளமேடு எப்.சி., யுனிவர்சல் ரீக்கிரியேஷன் கிளப், மதுக்கரை யுனைடெட் எப்.சி., போத்தனுார் ஸ்போர்ட்ஸ் கிளப், துரைசாமி நினைவு எப்.சி., எம்.ஆர்.எப்.சி., சி.ஐ.டி., எப்.சி., ஜக்கோபி எப்.சி., ஆகிய 9 அணிகள் இடம் பிடித்துள்ளன.
நேற்று நடந்த முதல் போட்டியில் பீளமேடு எப்.சி., மற்றும் ஜக்கோபி எப்.சி., அணிகள் மோதின. இப்போட்டியில் இரு அணிகளும் தலா 2 கோல் அடிக்க ஆட்ட நேர முடிவில், 2 - 2 என்ற கோல் கணக்கில் போட்டி டிராவில் முடிந்தது. பீளமேடு அணிக்கு கோகுல் (9வது நிமிடம்), மாதவ் கோகுல் (60வது) நிமிடம் கோல் அடித்தனர். ஜக்கோபி அணிக்கு பிரபு ராஜ் (19வது நிமிடம்), சபரி விஜய் (37வது நிமிடம்) ஆகியோர் கோல் அடித்தனர்.

