/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
அனுபவ கற்றல் மையம் திறப்பு விழா
/
அனுபவ கற்றல் மையம் திறப்பு விழா
ADDED : செப் 19, 2024 11:05 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கோவை: ரத்தினம் கல்வி குழுமம் சார்பில், ரத்தினம் தொழில்நுட்ப வளாகத்தில், மாணவர்களின் ஆராய்ச்சி செயல்பாடுகளை மேம்படுத்தும் வகையில், அனுபவ கற்றல் மையம் புதிதாக திறக்கப்பட்டுள்ளது.
ரத்தினம் கல்விக்குழும இயக்குனர் ஷீமா செந்தில் தலைமை வகித்து நிகழ்ச்சியை துவக்கிவைத்தார். எக்ஸ்பிரி நிறுவன மனித வள மேம்பாட்டுத்துறை தலைவர் மன்ரூப் சிங் செஹமி மையத்தை திறந்துவைத்து, தொழில்நுட்ப வளர்ச்சிக்கு ஏற்ப திறன்களை மேம்படுத்துவதன் அவசியம், ஆராய்ச்சிகளின் முக்கியத்துவம் குறித்து மாணவர்களிடம் விளக்கமளித்தார். இதில், ரத்தினம் குழுமத்தின் தலைவர் மதன் செந்தில், துணைத்தலைவர் நாகராஜ், செயலாளர் மாணிக்கம் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.