/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
நடுநிலைப்பள்ளியில் புதிய கட்டடம் திறப்பு
/
நடுநிலைப்பள்ளியில் புதிய கட்டடம் திறப்பு
ADDED : பிப் 02, 2024 11:15 PM
கிணத்துக்கடவு:கிணத்துக்கடவு, ரங்கேகவுண்டன்புதுாரில் உள்ள ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் புதிதாக கட்டடம் கட்டப்பட்டு திறக்கப்பட்டது.
கிணத்துக்கடவு, சொக்கனுார் ஊராட்சிக்கு உட்பட்ட ரங்கேகவுண்டன்புதுார் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில், 60க்கும் மேற்பட்ட மாணவர்கள் கல்வி பயின்று வருகின்றனர். மாணவர்கள் நலன் கருதி இப்பள்ளியில் புதிதாக இரண்டு பள்ளி கட்டடம், 25 லட்சம் மதிப்பீட்டில், சுரங்கம் மற்றும் கனிமவளத்துறை நிதியில் கட்டப்பட்டது.
பள்ளி கட்டடம் திறப்பு விழாவில், ஊராட்சி தலைவர் திருநாவுக்கரசு, கிணத்துக்கடவு வட்டார வளர்ச்சி அலுவலர்கள் ராதாகிருஷ்ணன், சிக்கந்தர் பாட்சா பள்ளி ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் பங்கேற்றனர்.

