ADDED : டிச 28, 2024 12:16 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கருமத்தம்பட்டி; பருவம்பள்ளி ஊராட்சிக்குட்பட்ட எம்.ராயர்பாளையத்தில் துவக்க பள்ளி செயல்படுகிறது. அதை புதுப்பித்து தர பெற்றோர் கோரிக்கை விடுத்தனர்.
ஊராட்சி நிர்வாகத்தின் முயற்சியில், சென்னப்பசெட்டி புதூரில் உள்ள மாபால் இந்தியா நிறுவனம் சார்பில், பள்ளி கட்டடம் மற்றும் அங்கன்வாடி மையத்தை புதுப்பித்து தர முன்வந்தது. பணிகள் முடிந்து நேற்று திறப்பு விழா நடந்தது.
ஊராட்சி தலைவர் சரவணன், தனியார் நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் ஸ்ரீ பதி ஆகியோர் கட்டடங்களை திறந்து வைத்தனர்.

