/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
மாற்றுத்திறனாளிகளுக்கு மறுவாழ்வு மையம் துவக்கம்
/
மாற்றுத்திறனாளிகளுக்கு மறுவாழ்வு மையம் துவக்கம்
ADDED : பிப் 04, 2024 12:07 AM

கோவை:மதுக்கரையில், சி.எஸ்., கல்வி அறக்கட்டளையின் கீழ் நைட்டிங்கேல் கல்வி நிறுவனங்கள் இயங்கி வருகிறது. இக்கல்வி குழுமம் சார்பில், மாவட்ட மாற்றுத்திறனாளிகள் மறுவாழ்வு மையம் துவங்கப்பட்டுள்ளது.
துவக்க விழாவிற்கு, நடராஜ் மருத்துவமனையின் நிர்வாக இயக்குனர் டாக்டர் நடராஜன், நைட்டிங்கேல் கல்வி குழும தலைவர் மனோகரன் பங்கேற்றனர். சிறப்பு விருந்தினராக கலந்துகொண்ட முன்னாள் தமிழக தலைமை செயலாளர் இறையன்பு, மறுவாழ்வு மையத்தை திறந்து வைத்தார். மாற்றுத்திறனாளிகளுக்கு சக்கர நாற்காலி, ஊன்று கோல் ஆகிய உபகரணங்களை வழங்கினார்.
நைட்டிங்கேல் கல்லுாரி, அன்னை மீனாட்சி கல்லூரி, எண்ணம் கல்லுாரி ஆகிய மூன்று கல்லுாரிகளில் பயிலும் முதலாம் ஆண்டு செவிலிய மாணவர்களின் தீப ஒளியூட்டு விழா, நைட்டிங்கேல் இயன்முறை மருத்துவம், எண்ணம் மருந்தியல் கல்லுாரியில் பயிலும் முதலாம் ஆண்டு மாணவர்களுக்கு, வெள்ளை அங்கி அணிவிப்பு விழா ஆகியவையும் நடந்தது.
நிகழ்வில், மத்திய அரசின் சமூக நல அமைச்சக தேர்வு கட்டுப்பாட்டு அதிகாரி டாக்டர் மதிவாணன், நர்சிங் கண்காணிப்பாளர் தங்கமணி, நைட்டிங்கேல் மற்றும் எண்ணம் கல்லுாரிகளை சேர்ந்த முதல்வர்கள், துணை முதல்வர்கள், துறை தலைவர்கள், ஆசிரியர்கள், மாணவர்கள் பங்கேற்றனர்.