/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
பேரூரடிகளார் மருத்துவமனையில் அறுவை சிகிச்சை அரங்கம் திறப்பு
/
பேரூரடிகளார் மருத்துவமனையில் அறுவை சிகிச்சை அரங்கம் திறப்பு
பேரூரடிகளார் மருத்துவமனையில் அறுவை சிகிச்சை அரங்கம் திறப்பு
பேரூரடிகளார் மருத்துவமனையில் அறுவை சிகிச்சை அரங்கம் திறப்பு
ADDED : நவ 14, 2024 11:21 PM

அன்னுார் ; கணேசபுரம் அருகே முதலிபாளையத்தில் பேரூரடிகளார் மருத்துவமனை செயல்படுகிறது. இந்த மருத்துவமனையில் புதிதாக நவீன அறுவை சிகிச்சை அரங்கம், தீவிர சிகிச்சை பிரிவு, பச்சிளம் குழந்தைகளுக்கு தீவிர சிகிச்சை பிரிவு, நவீன லேப் மற்றும் உணவு கூடங்கள் திறப்பு விழா நேற்று நடந்தது.
மருத்துவமனை தலைவர் மற்றும் பேரூராதீனம் சாந்தலிங்க மருதாசல அடிகள் தலைமை வகித்தார். தலைமை நிர்வாக அலுவலர் சுப்பிரமணியம் வரவேற்றார்.
உலக சர்க்கரை நோய் தினம் மற்றும் குழந்தைகள் தினத்தை முன்னிட்டு, இலவசமாக மருத்துவ பரிசோதனைகள் செய்யப்பட்டன. நிகழ்வில், பண்ணாரி அம்மன் நிறுவனங்களின் தலைவர் பாலசுப்பிரமணியம், ரூட்ஸ் நிறுவனங்களின் தலைவர் ராமசாமி, சக்தி மசாலா இயக்குனர் துரைசாமி, சீரவை ஆதீனம் ராமானந்த குருபர சுவாமிகள், பழனி ஆதீனம் சாது சண்முக அடிகள், தென்சேரி மலை ஆதீனம் முத்து சிவராம சாமி அடிகள், மருத்துவமனையின் உறைவிட மருத்துவ அலுவலர் பொன்முடிச் செல்வன் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.