/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
ஊராட்சி அலுவலக கட்டடம் திறப்பு
/
ஊராட்சி அலுவலக கட்டடம் திறப்பு
ADDED : ஜன 03, 2025 11:01 PM

மேட்டுப்பாளையம்; காரமடை ஊராட்சி ஒன்றியம், பெள்ளேபாளையம் ஊராட்சியில், புதிய ஊராட்சி அலுவலக கட்டடம், நீர் உந்து நிலையம், சுகாதார வளாக கட்டடம், கான்கிரீட் சாலை ஆகியவை ஒரு கோடியே, 4 லட்சம் ரூபாய் செலவில் கட்டப்பட்டது. அதன் திறப்பு விழா நேற்று மாலை நடந்தது. விழாவுக்கு மாவட்ட கலெக்டர் கிராந்தி குமார் தலைமை வகித்தார். ஊராட்சி தலைவர் சிவக்குமார் வரவேற்றார்.
தமிழக மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை அமைச்சர் செந்தில் பாலாஜி, புதிய அலுவலக கட்டடத்தையும், நீர் உந்து நிலையத்தையும் திறந்து வைத்து, பேசுகையில், ''தமிழகத்தில் கடந்த மூன்று ஆண்டுகளில், தி.மு.க., ஆட்சியில், இரண்டு லட்சம் விவசாயிகளுக்கு, இலவச மின்சாரம் வழங்கப்பட்டுள்ளது. இது அல்லாமல் மருத்துவ திட்டங்கள், கனவு இல்லம் உள்ளிட்ட பல்வேறு திட்டங்கள் ஆகியவை மக்களுக்கு நடைமுறைப் படுத்தப்பட்டுள்ளன,'' என்றார்.
துணைத் தலைவர் சுரேந்திரன் நன்றி கூறினார்.