UPDATED : மே 10, 2026 07:04 PM
ADDED : மே 10, 2026 07:01 PM

விபத்து அபாயம்
சின்னியம்பாளையம் கோகுலம் பார்க் முன் அவிநாசி ரோட்டை இணைக்கும் மயிலம்பட்டி ரோட்டில் ஆங்காங்கே குழிகள் உள்ளன. குறிப்பாக, ரோடு இணையும் இடத்திலேயே இரண்டு பெரிய குழிகள் உள்ளதால் அவ்வப்போது விபத்துக்கள் ஏற்படுகின்றன. மழை நேரங்களில் இக்குழிகளால் விபத்துக்கள் ஏற்படும் அபாயம் உள்ளன.
-நர்மதா:
பெரிய பெட்டி தேவை மதுக்கரை மார்க்கெட் கிளை தபால் அலுவலகத்தில் வைக்கப்பட்டுள்ள தபால் பெட்டி சிறியதாக உள்ளது. தினமும் தபால்கள் அதிகம் போடப்படுவதால் நிரம்பி விடுகிறது. அதை மாற்றி பெரிய பெட்டியாக வைக்க வேண்டும்.
-ஆறுச்சாமி:
துர்நாற்றம் வீசுகிறது மாநகராட்சி 32வது வார்டு சங்கனுாரில் உள்ள சண்முகா நகர் இரண்டாவது வீதியில் சாக்கடை கால்வாய் துர்நாற்றம் வீசுகிறது. மேல் பலகையும் சிதிலமடைந்துள்ளதால் விபத்து அபாயம் உள்ளது. மாநகராட்சி நிர்வாகத்திடம் பலமுறை முறையிட்டும் எந்த நடவடிக்கையும் இல்லை.
-நந்தினி:
தரமற்ற பலகை காந்திபுரத்தில் புதிதாக கட்டிய பெரியார் அறிவுலகம் நுழைவாயில் முகப்பில் பெயர் பலகை தரமற்று உள்ளது.
-பாலமுருகன்:
தடுமாறும் வாகனம் மாநகராட்சி 58வது வார்டு வசந்தாமில்ஸ் அடுத்த எஸ்.என்.ஆர்., நகர் முதல் வீதியில் சாக்கடை கட்டுவதற்காக குழிகள் தோண்டப்பட்டன. பணிகள் முடிந்து மாதங்களாகியும் ரோட்டின் ஓரம் கொட்டப்பட்ட கட்டட கழிவுகள் அகற்றப்படவில்லை. வாகனங்கள் தடுமாறுகின்றன.
-இன்பசேகரன்:
