தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/ இன்பாக்ஸ்

இன்பாக்ஸ்

இன்பாக்ஸ்


ADDED : செப் 17, 2026 04:31 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : செப் 17, 2026 04:31 PM


Follow on Google
அ நிறம் | அளவு

1. மூடப்படாத குழி மாநகராட்சி 38-வது வார்டு, ராமலிங்க கவுண்டர் வீதியில் தண்ணீர் கசிவுக்காக தோண்டப்பட்ட குழி, 15 நாட்களாகியும் மூடப்படாமல் உள்ளது. பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் சிரமப்படுகின்றனர். 

–கார்த்திகேயன்: 2. எரியாத தெரு விளக்குகள் கிழக்கு மண்டலம், எம்.ஜி.ஆர். நகர் கிழக்கு சாலையில் கடந்த ஒரு மாதமாக தெருவிளக்குகள் எரியவில்லை. பாதுகாப்பற்ற சூழல் நிலவுகிறது.

–தமிழ்செல்வன்: 3. பொம்மன்னம்பாளையம் பாலாஜி நகரில் தெருவிளக்கு பல மாதங்களாக எரியவில்லை.

–விஜயகுமார்: 6. மாநகராட்சி 36-வது வார்டு, கிளாசிக் கார்டனில் உள்ள தெருவிளக்கு பல மாதங்களாக எரியவில்லை.  

–அசோக் சுப்ரமணியம், கிளாசிக் கார்டன். 4. சேதமடைந்த ரோடு அவிநாசி மேம்பாலத்தின் கீழ் மில் ரோட்டில் ஏராளமான வாகனங்கள் செல்கின்றன. ஆனால் பாதை சேதம் அடைந்துள்ளதால், வாகன ஓட்டிகள் சிரமத்துக்குள்ளாகின்றனர். 

–உன்னிகிருஷ்ணான்: 5. ஆபத்தான மின்கம்பிகள் விளாங்குறிச்சி ஸ்ரீ முருகன் நகரில் மின்கம்பங்கள் அதிக இடைவெளியில் அமைந்துள்ளதால், மின்கம்பிகள் வீடுகளுக்கு மிக அருகில் தாழ்வாக தொங்குகிறது. இதனால் வீட்டின் அருகே வாகனங்கள் செல்லும்போது விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது.

–காயத்திரி தேவி: 7. சாலை ஆக்கிரமிப்பு நரசிம்மநாயக்கன்பாளையம் பஸ் ஸ்டாப்பில் இருந்து குறிப்பிட்ட துாரம் பைக், கார்கள் ரோடடை மறித்து நிறுத்தப்படுகின்றன. இதனால் அடிக்கடி விபத்து நடக்கிறது.

–சந்திரசேகரன்: 8. தெருநாய் தொல்லை நல்லாம்பாளையம் ரோட்டில் கூட்டமாக சுற்றித் திரியும் தெருநாய்கள் திடீர் திடீரென வாகனங்களை துரத்துவதால் சிரமம் ஏற்படுகிறது.  

–ராமமூர்த்தி: 9. பெயர் பலகை வேண்டும் உக்கடம் பஸ் முனையம் மார்ச்சில் திறக்கப்பட்டது. புதிது என்பதால் மக்களுக்கு குழப்பமாக இருக்கிறது. பஸ் மாறி ஏறுவது வழக்கமாக நடக்கிறது. இரண்டாம் முனையம் திறக்கப்படாததால் அனைத்து பஸ்களும் இங்கிருந்து இயக்கப்படுகிறது. எனவே பஸ்கள் குறித்த பெயர் பலகை வைக்க வேண்டும்.

-–ராமன்: 10.பலன் இல்லாத நோ பார்க்கிங் ஹோப்ஸ்–சிங்காநல்லூர் ரோடு, லட்சுமி மில்ஸ்–ராமநாதபுரம் ரோடு, அண்ணா சிலை–ரேஸ்கோர்ஸ் ரோடு, நஞ்சப்பா ரோடு என நகரின் முக்கியமான ரோடுகளில் நோ பார்க்கிங் போர்டுகளை பொருட்படுத்தாமல் வண்டிகளை நிறுத்துகின்றனர். போலீஸ் ஏன் கண்டுகொள்வதே இல்லை? –பரமசிவன், புலியகுளம்

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us