ADDED : செப் 17, 2026 04:11 PM
‘தினமலர்’ செய்தி எதிரொலி
கிணத்துக்கடவு: கோதவாடி ரேஷன் கடை கட்டடத்தின் திட்ட மதிப்பு தொகையில் இருந்த வேறுபாடு, ‘தினமலர்’ செய்தி எதிரொலியாக திருத்தம் செய்யப்பட்டது.
கிணத்துக்கடவு, கோதவாடி ஊராட்சியில், கடந்த 2024 மார்ச் மாதம் முழுநேர ரேஷன் கடை கட்டப்பட்டது. இந்த ரேஷன் கடையின் மேற்கூரை கல்வெட்டில், ஊராட்சி ஒன்றிய பொது நிதி, 10 லட்சம் ரூபாய் எனவும்; கட்டடத்தில் பதிக்கப்பட்ட கல்வெட்டில் ஊராட்சி ஒன்றிய பொது நிதி, 12 லட்சம் எனவும் குறிப்பிடப்பட்டு இருந்தது.
இதனால், ரேஷன் கடை கட்டட மதிப்பு தொகை எவ்வளவு என்பதில் குழப்பம் ஏற்பட்டது. இதுகுறித்து, ‘தினமலர்’ நாளிதழிலில் நேற்று செய்தி வெளியிடப்பட்டது.
இதையடுத்து, ரேஷன் கடை கட்டட திட்ட மதிப்பு தொகை, 10 லட்சம் ரூபாய் என, கட்டடத்தில் பதிக்கப்பட்ட கல்வெட்டில், திருத்தம் செய்யப்பட்டது.
