நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
வால்பாறை; வால்பாறை அரசு மருத்துவமனையில் பணிபுரியும் துாய்மை பணியாளர்களுக்கு, ஊக்கத்தொகை வழங்கப்பட்டது.
கோவை மாவட்டம் வால்பாறையில் அரசு மருத்துவமனை உள்ளது. இங்கு, மொத்தம், 10 துாய்மை பணியாளர்கள் பணியிடம் காலியாக உள்ளது. காலிப்பணியிடத்திற்கு ஆள் நியமிக்காததால், தற்காலிக அடிப்படையில் மூன்று பேர் பணிபுரிந்து வருகின்றனர்.
இவர்களுக்கு நோயாளிகள் நலச்சங்கத்தின் சார்பில் நாள் ஒன்றுக்கு, 250 ரூபாய் வீதம் தினக்கூலியாக வழங்கப்படுகிறது.
இந்நிலையில், வால்பாறை தி.மு.க., சார்பில் நகர செயலாளர் சுதாகர் தனது சொந்த செலவில் துாய்மை பணியாளர்களுக்கு ஊக்கத்தொகையாக தலா, 5 ஆயிரம் ரூபாய் வழங்கினார். நிகழ்ச்சியில், அரசு மருத்துவமனை தலைமை மருத்துவர் நித்யா மற்றும் டாக்டர்கள், செவிலியர்கள், அலுவலர்கள் உடன் இருந்தனர்.