/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
முன்னாள் மாணவர்கள் பள்ளிக்கு ஊக்கத்தொகை
/
முன்னாள் மாணவர்கள் பள்ளிக்கு ஊக்கத்தொகை
ADDED : செப் 09, 2025 10:44 PM

கோவை; புனித மைக்கேல் மேல்நிலைப்பள்ளியில், 2024-25 கல்வியாண்டில், 10, 11, 12ம் வகுப்பு பொதுத்தேர்வில் பள்ளி அளவில், முதல் மூன்று இடங்கள் பெற்ற மாணவர்களுக்கும், 10 மற்றும் 12ம் வகுப்பில் பாட வாரியாக சிறந்த மதிப்பெண் பெற்ற மாணவர்களுக்கும், முன்னாள் மாணவர்கள் சார்பில், ஊக்கத்தொகை வழங்கப்பட்டது.
தலைமையாசிரியர் ஆல்பர்ட் சகாய இருதயராஜ் கூறுகையில், “1972-73 கல்வியாண்டில் இப்பள்ளியில் பயின்ற தாமரை செல்வன், ஜெரோம், ரகுநாதன் ஆகியோர் இணைந்து, பொதுத்தேர்வில் அதிக மதிப்பெண் பெறும் மாணவர்களுக்கு, ரூ.30 ஆயிரம் ஊக்கத்தொகை வழங்கி வருகின்றனர்.
இவ்வாண்டு 35 மாணவர்களுக்கு ஊக்கத்தொகை பிரித்து வழங்கப்பட்டது.
முன்னாள் மாணவர்களது பங்களிப்பு, பள்ளியின் தரத்தை உயர்த்துவதோடு மட்டுமல்ல; மாணவர்களுக்கும் உற்சாகத்தை ஏற்படுத்துகிறது,” என்றார்.
பள்ளி வளாகத்தில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில், பள்ளி தாளாளர் மெல்சியர், மாணவர்களின் பெற்றோர் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.