/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
முதல் மதிப்பெண் பெற்ற அரசுப்பள்ளி மாணவர்களுக்கு ஊக்கத்தொகை
/
முதல் மதிப்பெண் பெற்ற அரசுப்பள்ளி மாணவர்களுக்கு ஊக்கத்தொகை
முதல் மதிப்பெண் பெற்ற அரசுப்பள்ளி மாணவர்களுக்கு ஊக்கத்தொகை
முதல் மதிப்பெண் பெற்ற அரசுப்பள்ளி மாணவர்களுக்கு ஊக்கத்தொகை
ADDED : மார் 21, 2025 11:08 PM

கோவை; அரசுப் பள்ளி மாணவ, மாணவியர், 24 பேருக்கு கோவை ஜில்லா பஞ்சாலை தொழிலாளர் சங்கம் சார்பில், கல்வி ஊக்கத்தொகை வழங்கப்பட்டது.
கோவை ஜில்லா பஞ்சாலை தொழிலாளர் சங்கம்(எச்.எம்.எஸ்.,) சார்பில், முன்னாள் எம்.எல்.ஏ., சுப்பிரமணியம் நினைவு நாளான நேற்று முன் தினம் அரசு, அரசு உதவிபெறும் பள்ளி மாணவ, மாணவியருக்கு கல்வி ஊக்கத்தொகை வழங்கும் நிகழ்ச்சி, சிங்காநல்லுாரில் உள்ள என்.ஜி.ஆர்., மஹாலில் நடந்தது.
இதில், தியாகி என்.ஜி. ராமசாமி நினைவு மேல்நிலைப்பள்ளி, சிங்காநல்லுார் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளி, ஒண்டிப்புதுார் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளி, ஒண்டிப்புதுார் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி மாணவர்கள், 24 பேருக்கு கல்வி ஊக்கத்தொகை வழங்கப்பட்டது.
2023-24ம் கல்வியாண்டில் பிளஸ்2, பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வுகளில் பள்ளி அளவில் முதல் மதிப்பெண் பெற்றவருக்கு ரூ.3,000, இரண்டாம் இடம் பிடித்தவருக்கு ரூ.2,000, மூன்றாம் இடம் பிடித்தவருக்கு ரூ.1,000 ஊக்கத்தொகையை, சங்கத் தலைவர் ராஜாமணி வழங்கினார். செயலாளர்(பொ) மனோகரன் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.