ADDED : ஜூன் 14, 2025 11:34 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மேட்டுப்பாளையம்: கோவை மாவட்டம் காரமடையில் உள்ள, தமிழ்நாடு சவரத் தொழிலாளர் சங்கம் சார்பில், இந்த ஆண்டு 10 மற்றும் 12ம் வகுப்பு பொதுத்தேர்வில் தேர்ச்சி பெற்ற, காரமடை சுற்றுவட்டாரப் பகுதியை சேர்ந்த 15 மாணவ, மாணவிகளுக்கு நோட்டு புத்தகம் மற்றும் தலா ரூ.1,000 ஊக்கத்தொகை வழங்கப்பட்டது. இந்த நிகழ்விற்கு சங்கத்தின் கோவை வடக்கு மாவட்ட துணை செயலாளர் பழனி சாமி தலைமை வகித்தார்.
நகர கிளை தலைவர் சக்திவேல் முன்னிலை வகித்தார். துணை தலைவர் முத்து, செயலாளர் செந்தில்குமார், பொருளாளர் ரமேஷ்குமார் மற்றும் சங்க உறுப்பினர்கள் பங்கேற்றனர்.-----