/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
வசதியில்லாத அங்கன்வாடி; வராத குழந்தைகள் புது கட்டடம் கட்டியும் பயனில்லை
/
வசதியில்லாத அங்கன்வாடி; வராத குழந்தைகள் புது கட்டடம் கட்டியும் பயனில்லை
வசதியில்லாத அங்கன்வாடி; வராத குழந்தைகள் புது கட்டடம் கட்டியும் பயனில்லை
வசதியில்லாத அங்கன்வாடி; வராத குழந்தைகள் புது கட்டடம் கட்டியும் பயனில்லை
ADDED : மார் 10, 2024 11:32 PM

குடிமங்கலம்;உடுமலை அருகே, அங்கன்வாடி மையத்துக்கு, மின் இணைப்பு மற்றும் குடிநீர் வசதி ஏற்படுத்தி தராததால், மையத்துக்கு குழந்தைகளை, பெற்றோர் அனுப்புவதில்லை. இந்நிலைக்கு மாவட்ட நிர்வாகம் முற்றுப்புள்ளி வைக்க வேண்டும்.
குடிமங்கலம் ஒன்றியம், விருகல்பட்டி ஊராட்சிக்குட்பட்ட கிராமம் மரிக்கந்தை. கிராமத்திலுள்ள குழந்தைகளின் தேவைக்காக குடிமங்கலம் வட்டார ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்டத்தின் கீழ் அங்கன்வாடி மையம் செயல்பட்டு வந்தது.
தற்காலிக கட்டடத்தில் செயல்பட்டு வந்த மையத்துக்கு கடந்தாண்டு, நிரந்தர கட்டடம் கட்டப்பட்டது. ஆனால், இதுவரை, கட்டடத்துக்கு மின்இணைப்பு வழங்கப்படவில்லை. குடிநீர் வசதியும் இல்லை.
கோடை காலத்தில், மையத்தின் உள்ளே அதிக வெப்ப நிலை நிலவுவதால், குழந்தைகளை பராமரிக்க முடிவதில்லை. இதனால், கிராமத்தைச்சேர்ந்த பெற்றோர் மையத்துக்கு, குழந்தைகளை அனுப்ப மறுக்கின்றனர்.
அப்பகுதியை சேர்ந்த தன்னார்வலர்கள் அங்கன்வாடி மையத்துக்கு, மின்விசிறி அமைத்து தர அணுகிய போது மின் இணைப்பு வழங்கப்படாதது தெரியவந்தது. மேலும், குடிநீர் இணைப்பும் இல்லை.
இது குறித்து, அப்பகுதி மக்கள் திருப்பூர் மாவட்ட நிர்வாகத்துக்கு அனுப்பியுள்ள மனு: மரிக்கந்தை கிராமத்தில், விவசாயிகள் மற்றும் விவசாய தொழிலாளர்கள் அதிகம் வசிக்கின்றனர்.
விளைநிலங்களுக்கு செல்பவர்கள், தங்கள் குழந்தைகளை பாதுகாப்பாக விட்டு செல்ல அங்கன்வாடி மையம் உதவியாக இருந்தது. புதிய கட்டடம் கட்டியும் தேவையான வசதிகள் இல்லாததால், குழந்தைகளை, பெற்றோர் அனுப்புவதில்லை.
இது குறித்து உடனடி நடவடிக்கை எடுத்து, அங்கன்வாடி மையத்துக்கு தேவையான வசதிகளை செய்து தர வேண்டும்.
இவ்வாறு, மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

