ADDED : ஆக 29, 2025 10:19 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
அன்னுார்; அன்னுாரில் மின்சார வாகனங்களின் பயன்பாடு அதிகரித்துள்ளது.
இதனால் அன்னுாரில், அவிநாசி சாலையில் இருந்து, சோமனுார் செல்லும் சாலையில் இருசக்கர வாகனங்களுக்கான சார்ஜிங் மையம் கடந்த இரு மாதங்களுக்கு முன்பு நிறுவப்பட்டது. கடந்த மாதம் சத்தி ரோட்டில் தாலுகா அலுவலகம் எதிரிலும் சார்ஜிங் மையம் துவக்கப்பட்டது. கடந்த வாரம் அன்னுாரில் மேட்டுப்பாளையம் சாலையில் மே கிணறு அருகே நான்கு சக்கர வாகனங்களுக்கு சார்ஜிங் மையம் அமைக்கப் பட்டது.