தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/ டெங்கு காய்ச்சல் அதிகரிப்பது ஏன்?

டெங்கு காய்ச்சல் அதிகரிப்பது ஏன்?

டெங்கு காய்ச்சல் அதிகரிப்பது ஏன்?


ADDED : செப் 28, 2026 06:35 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : செப் 28, 2026 06:35 PM


Follow on Google
அ நிறம் | அளவு

கோவை: தேங்கும் சுத்தமான நீரில் இருந்து கொசுக்கள் உற்பத்தியாகி டெங்குவை பரப்புகின்றன. பகலில் கடிக்கும் கொசுக்களால் டெங்கு பரவுவதால், சுற்றுப்புறத்தை துாய்மையாக வைத்திருப்பது அவசியம் என்கின்றனர் மருத்துவர்கள்.

கோவையில் கடந்தாண்டில் 1,325 பேர் டெங்கு காய்ச்சல் பாதிப்புக்குள்ளாகினர். நடப்பாண்டு இதுவரை 1,822 பேர் டெங்குவால் பாதிக்கப்பட்டுள்ளனர். மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் மட்டும் 859 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 

காய்ச்சல் அதிகரிப்பது ஏன்?

டெங்கு காய்ச்சல் பரப்பும் ஏடிஸ் கொசு, பகலில் மட்டுமே கடிக்கின்றன. இவை, நல்ல தண்ணீரில் மட்டுமே உற்பத்தியாகின்றன. சாக்கடை தண்ணீரிலோ, தேங்கும் கழிவுநீரிலோ இருப்பதில்லை. 

மழைநீர் தேங்கும் வகையில் பொது இடங்களில் வீசப்படும் பொருட்களில் தேங்கும் மழைநீரில் ஏடிஸ் கொசு உற்பத்தியாகிறது.  

அவ்வப்போது விட்டு விட்டு பெய்யும் மழையால், தேங்கும் தண்ணீரில் இருந்தே, இக்கொசு உற்பத்தியாவதால் தான், காய்ச்சல் பாதிப்பு அதிகரித்துள்ளது.

தடுப்பது எப்படி?

வீடுகளில் நல்ல தண்ணீர் சேமிக்கும் பேரல், தொட்டி, குடம் ஆகியவற்றை நன்கு மூடி வைப்பதோடு, கொசு உற்பத்தியாகாமல் பார்த்துக் கொள்ள வேண்டும்.

டெங்கு கொசு பகலில் கடிப்பதால், வீடு, பள்ளி, கல்லுாரிகளில் ஜன்னல், கதவுகளுக்கு கொசு வலை பொருத்தலாம்.

முழு பேன்ட்ஸ், சட்டை அணியலாம். தண்ணீரை காய்ச்சி குடிப்பது, கை, கால்களை சுத்தமாக கழுவுவது, சுற்றுப்புறத்தை சுத்தமாக வைத்திருப்பது அவசியம்.

ஏடிஸ் கொசுவை அறிவது எப்படி ஏடிஸ் கொசுக்களின் உடல் கறுப்பு நிறத்திலும், கால்களில் வெள்ளை நிற புள்ளி அல்லது வரிகள் இருக்கும். முதுகு, நெஞ்சுப்பகுதியில் வெள்ளை நிறத்தில் கோடு இருக்கும். நல்ல தண்ணீரில் மட்டுமே உற்பத்தியாகும். 



‘ஓய்வும், உணவும் சீக்கிரம் குணமாக்கும்’ அரசு மருத்துவமனை பொது மருத்துவத்துறை தலைவர் டாக்டர் சிவக்குமார் கூறுகையில், ‘‘ காய்ச்சல் அறிகுறி இருந்தால் டாக்டரை அணுகுவது அவசியம். மெடிக்கல் ஷாப்களில் மாத்திரை வாங்கி சுயமாக சாப்பிட கூடாது. ஒரு கிலோ உடல் எடைக்கு 10 மிலி., என்ற அளவில், ஒரு மணி நேரத்திற்கு ஒருமுறை திரவ உணவு எடுத்துக் கொள்ள வேண்டும். சிறுநீர் உரிய இடைவெளியில் கழிப்பது, சிறுநீர் நிறம் ஆகியவற்றை கண்காணிக்க வேண்டும். ஓய்வும், திரவ உணவுகளும், மருந்தும் தான், காய்ச்சலை தீவிர நிலைக்கு கொண்டு செல்லாமல் காக்கும்,’’ என்றார்.



தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us