/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
யானைகள் நடமாட்டம் அதிகரிப்பு; தேயிலை தொழிலாளர்கள் தவிப்பு
/
யானைகள் நடமாட்டம் அதிகரிப்பு; தேயிலை தொழிலாளர்கள் தவிப்பு
யானைகள் நடமாட்டம் அதிகரிப்பு; தேயிலை தொழிலாளர்கள் தவிப்பு
யானைகள் நடமாட்டம் அதிகரிப்பு; தேயிலை தொழிலாளர்கள் தவிப்பு
ADDED : ஜூலை 13, 2025 08:57 PM

வால்பாறை; தமிழக -- கேரள எல்லையில் வால்பாறை அமைந்துள்ளது. பருவமழைக்கு பின், வனவளம் பசுமையாக இருப்பதால், பல்வேறு எஸ்டேட் பகுதியில் நுாற்றுக்கும் மேற்பட்ட யானைகள் தனித்தனி கூட்டமாக முகாமிட்டுள்ளன.
குறிப்பாக, புதுத்தோட்டம், குரங்குமுடி, அய்யர்பாடி, ேஷக்கல்முடி, புதுக்காடு, சங்கிலிரோடு உள்ளிட்ட எஸ்டேட்களில் யானைகள் அதிகளவில் உள்ளன. பெரும்பாலான எஸ்டேட்களில் பகல் நேரத்தில் யானைகள் தேயிலை காட்டில் முகாமிட்டுள்ளதால், தொழிலாளர்கள் தேயிலைபறிக்கும் பணியில் ஈடுபட முடியாமல் தவிக்கின்றனர்.
வனத்துறையினர் கூறியதாவது:
எஸ்டேட் பகுதியில் முகாமிட்ட யானைகள், பகல் நேரத்தில் தண்ணீர் குடிக்க அருகில் உள்ள ஆறு, சிற்றருவிக்கு கூட்டமாக வருகின்றன. ரோட்டை ஒட்டியுள்ள தேயிலை எஸ்டேட்டிலும் யானைகள் முகாமிடுகின்றன. அப்போது, தேயிலை பறிக்கும் பணியில் ஈடுபடுவதை தவிர்க்க வேண்டும்.
இது போன்ற சூழ்நிலையில், சுற்றுலா பயணியர் தங்களது வாகனங்களை கவனமாக இயக்க வேண்டும். யானைக்கூட்டம் ரோட்டை கடந்து சென்றால், வாகனங்களை நிறுத்தி அவைகள் கடந்து சென்ற பின், இயக்க வேண்டும். யானைகள் நடமாடும் பகுதியில் தொழிலாளர்கள் அத்துமீறி நுழைந்து, விறகு தேடுவதை தவிர்க்க வேண்டும்.
இவ்வாறு, கூறினர்.