ADDED : பிப் 16, 2024 11:35 PM
கோவில்பாளையம்;சர்க்கார் சாமக்குளம் வட்டார வேளாண் உதவி இயக்குனர் நாமத்துல்லா வெளியிட்டுள்ள அறிக்கை:
எஸ்.எஸ்.குளம் வட்டாரத்தில், மானாவாரி மற்றும் இறவை பாசனத்தில், கொண்டைக்கடலை 452 எக்டேர் பரப்பளவில் சாகுபடி செய்யப்பட்டு வருகிறது.
தற்போது தேசிய உணவு பாதுகாப்பு திட்டம் மற்றும் ஊட்டச்சத்து திட்டத்தின் கீழ் கொண்டைக்கடலையில் செயல் விளக்க திடல் அமைக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
மானிய விலையில் விதைகள் மற்றும் டிரைகோ டெர்மா விர்டி போன்ற இடுபொருட்கள் விவசாயிகளுக்கு வழங்கப்பட்டுள்ளது.
அத்திப்பாளையத்தில் உள்ள துவரை பயிறு விதைப்பண்ணை மற்றும் கொண்டைக்கடலை செயல் விளக்கத்திடலில், வேளாண் உதவி இயக்குனர் நாமத்துல்லா, துணை வேளாண் அலுவலர் வேலுச்சாமி, தொழில்நுட்ப உதவியாளர் சூரிய பிரகாஷ் மற்றும் உதவி வேளாண் அலுவலர்கள் ஆய்வு செய்தனர்.
பயறு வகைகளில் கூடுதல் சாகுபடி கிடைக்க விவசாயிகளுக்கு அறிவுரை வழங்கப்பட்டது.
இவ்வாறு அறிக்கையில் தெரிவித்துள்ளார்.