/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
கொப்பரை விலை உயர்வால் இருப்பு வைப்பது அதிகரிப்பு
/
கொப்பரை விலை உயர்வால் இருப்பு வைப்பது அதிகரிப்பு
ADDED : செப் 20, 2024 10:06 PM
நெகமம் : நெகமம் ஒழுங்கு முறை விற்பனை கூடத்தில், விவசாயிகள் கொப்பரையை இருப்பு வைக்க துவங்கியுள்ளனர்.
கிணத்துக்கடவு மற்றும் நெகமம் சுற்று வட்டாரத்தில், 13 ஆயிரம் ஹெக்டேர் பரப்பில் தென்னை சாகுபடி உள்ளது. விவசாயிகள் பலர் தேங்காயில், கொப்பரை மற்றும் இதர மதிப்புக்கூட்டு பொருட்கள் தயாரித்து விற்பனை செய்கின்றனர்.
மத்திய அரசின் ஆதார விலை திட்டத்தை விட, தற்போது கொப்பரை விலை அதிகரித்துள்ளது. இன்னும் விலை அதிகரிக்கும் என, எதிர்பார்க்கப்படுகிறது.
இதனால், கடந்த சில நாட்களாக, விவசாயிகள் பலர் விற்பனை கூடத்தில் கொப்பரையை இருப்பு வைக்க துவங்கியுள்ளனர். நெகமம் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில், 5,600 மூட்டைகள் (50 கிலோ) கொப்பரையை, 39 விவசாயிகள் இருப்பு வைத்துள்ளனர்.
வெளிமார்க்கெட்டில், தற்போது, முதல் தர கொப்பரை, 122 முதல் 125 ரூபாய்க்கும், இரண்டாம் தர கொப்பரை 100 முதல், 110 ரூபாய் வரையும் விற்பனையாகிறது.
புதிதாக விற்பனை கூடத்தில் இருப்பு வைக்க விரும்பும் விவசாயிகள், விற்பனை கூடத்தை அணுகி விபரங்களை பெற்றுக்கொள்ளலாம். இத்தகவலை விற்பனை கூட கண்காணிப்பாளர் ஜெயராமகிருஷ்ணன் தெரிவித்தார்.