/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
கோடை கால வெப்ப நிலை அதிகரிப்பு :பாசன நீர், குடிநீருக்கு தட்டுப்பாடு
/
கோடை கால வெப்ப நிலை அதிகரிப்பு :பாசன நீர், குடிநீருக்கு தட்டுப்பாடு
கோடை கால வெப்ப நிலை அதிகரிப்பு :பாசன நீர், குடிநீருக்கு தட்டுப்பாடு
கோடை கால வெப்ப நிலை அதிகரிப்பு :பாசன நீர், குடிநீருக்கு தட்டுப்பாடு
ADDED : பிப் 13, 2024 11:02 PM

பாலக்காடு:கேரள மாநிலத்தில், பாலக்காடு மாவட்டத்தில் அதிக வெப்பநிலை பதிவாகி வருவதால், கோடை காலத்தில் குடிநீருக்கும், பாசனத்துக்கும் தண்ணீர் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம் உருவாகியுள்ளது.
கேரள மாநிலத்தில், கோடைக்கால வெப்பம் அதிகரித்துள்ளது. பாலக்காடு மாவட்டத்தில், மாநிலத்தில் அதிக வெப்பம் பதிவானது. கடந்த, 13 நாட்களாக பாலக்காட்டில் பதிவாகிய வெப்ப நிலை 35 முதல் 38 டிகிரி செல்சியஸ் வரை ஆகும்.
மாவட்டத்தில் அதிக வெப்ப நிலை பதிவான பகுதிகள், மூண்டூர், பட்டாம்பி, மலம்புழா ஆகியவையாகும். கடுமையான வெப்பத்தால் மாவட்டத்தின் முக்கிய அணைகளில் நீர்மட்டமும் வெகுவாக குறைந்துள்ளது.
தற்போதைய நிலை தொடர்ந்தால் மலம்புழா, வாளையார் அணைகளில் இருந்து விவசாயத்துக்கும், குடிநீருக்கும் தண்ணீர் வழங்குவதில் சிக்கல் ஏற்படும்.
வெப்பம் அதிகரித்ததால், மாவட்டத்தில் மானாவாரியான இடங்கள் தீ பிடிப்பதும் அதிகரித்துள்ளது. பொதுமக்களுக்கு தேவையான விழிப்புணர்வு இல்லாததே இத்தகைய தீ விபத்துக்கு காரணமென தீயணைப்புத்துறையினர் தெரிவித்தனர்.
இதுகுறித்து, தீயணைப்புத்துறை அதிகாரி ஒருவர் கூறுகையில், 'கோடை காலத்துக்கு முன்னதாகவே, நிலங்களில் உள்ள புதர்கள் வெட்டி அகற்ற வேண்டும்.
தீக்குச்சிகளை அணைக்காமல் அலட்சியமாக வீசக்கூடாது. விறகு அடுப்பு பயன்படுத்துவோர் சமையல் வேலை முடிந்த பின், தீயை அணைக்கப்பட்டதை உறுதி செய்ய வேண்டும்,' என்றார்.
கோடையில், இடைக்கால மழை கிடைக்காமல் தற்போதைய சூழ்நிலை தொடர்ந்தால், மார்ச் மாதம் வெப்பம் 40 டிகிரியை தொடும் என்று காலநிலை நிபுணர்கள் கூறுகின்றனர்.
அணைகளில் உள்ளிட்ட நீராதாரங்களில் நீர்மட்டம் குறைவதால் விவசாயமும் வெகுவாக பாதிக்கும் என்ற அச்சமும் பாலக்காடு மாவட்டத்தில் ஏற்பட்டுள்ளது.

