sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், நவம்பர் 06, 2025 ,ஐப்பசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கோயம்புத்தூர்

/

அரசு செலவில் தனியார் வாகனங்களில் பள்ளிக்கு வருகை; விடுப்பு எடுக்காத மாணவர்கள் எண்ணிக்கை அதிகரிப்பு

/

அரசு செலவில் தனியார் வாகனங்களில் பள்ளிக்கு வருகை; விடுப்பு எடுக்காத மாணவர்கள் எண்ணிக்கை அதிகரிப்பு

அரசு செலவில் தனியார் வாகனங்களில் பள்ளிக்கு வருகை; விடுப்பு எடுக்காத மாணவர்கள் எண்ணிக்கை அதிகரிப்பு

அரசு செலவில் தனியார் வாகனங்களில் பள்ளிக்கு வருகை; விடுப்பு எடுக்காத மாணவர்கள் எண்ணிக்கை அதிகரிப்பு


ADDED : பிப் 17, 2025 10:37 PM

Google News

ADDED : பிப் 17, 2025 10:37 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மேட்டுப்பாளையம்; காரமடை கல்வி வட்டாரத்தில், 17 அரசு பள்ளிகளில் படிக்கும் 425 மாணவர்கள் பள்ளிக்கு தனியார் வாகனங்களில் அரசு செலவிலேயே அழைத்து வரப்படுகின்றனர். இதனால், மலைக்கிராமங்களில் படிக்கும் மாணவர்கள் விடுப்பு எடுக்காமல் பள்ளிக்கு வருவோர் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.

காரமடை, மேட்டுப்பாளையம், சிறுமுகை பகுதிகளை உள்ளடக்கிய காரமடை கல்வி வட்டாரத்தில் 144 அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகள் செயல்பட்டு வருகின்றன. ஆர்.டி.இ., எனப்படும் கல்வி உரிமைச்சட்டத்தின் படி கே.ஜி.,வகுப்பு முதல் 5ம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்களுக்கு 1 கி.மீ., 6 முதல் 8ம் வகுப்பு மாணவர்களுக்கு 3 கி.மீ., 10ம் வகுப்பு மாணவர்களுக்கு 5 கி.மீ., 12ம் வகுப்பு மாணவர்களுக்கு 8 கி.மீ., சுற்றளவிலும் பள்ளிகள் இருக்க வேண்டும். இந்த சுற்றளவின் படி பள்ளிகள் இல்லாத பட்சத்தில் துாரமாக உள்ள பள்ளிகளுக்கு வரும் மாணவர்களுக்கு அரசு செலவில் ஆட்டோ, வேன் உள்ளிட்ட தனியார் வாகனங்கள் ஏற்பாடு செய்யப்பட்டு மாணவர்கள் பள்ளிக்கு அழைத்து வரப்படுகின்றனர். இதுகுறித்து, காரமடை வட்டார வள மைய ஆசிரியர் மற்றும் பயிற்றுநர் சுரேஷ் கூறியதாவது:-

ஆர்.டி.இ.,யின் படி பள்ளிகள் அருகில் இல்லாத மாணவர்களின் கல்வி எந்த விதத்திலும் பாதிக்கப்படக்கூடாது என்பதற்காக, அரசு அம்மாணவர்களுக்கு போக்குவரத்து நிதி வழங்குகிறது.

காரமடை கல்வி வட்டாரத்தில், 17 அரசு பள்ளிகளில் படிக்கும் 425 மாணவர்கள், பள்ளிக்கு ஆட்டோவில் அரசு செலவிலேயே அழைத்து வரும் திட்டம் நடைமுறையில் உள்ளது. ஒரு மாணவருக்கு மாதம் ரூ.600 வீதம் மாணவரை அழைத்து வரும் ஆட்டோ,வேன் டிரைவர்களின் வங்கி கணக்கிற்கு அனுப்பப்படும்.

இதனால் மாணவர்கள் ஆர்வமுடன் பள்ளிக்கு வருகின்றனர். குறிப்பாக மலைக்கிராமங்களில் படிக்கும் மாணவர்கள் விடுப்பு எடுக்காமல் பள்ளிக்கு வந்து கல்வி பயில்கின்றனர்.

பில்லுார் டேம், பரளி பவர் ஹவுஸ், அத்திக்கடவு, கோபனாரி, ஓடந்துறை காந்திநகர், நீலம்பதி, புதுக்காடு, ராமபாளையம், தோலம்பாளையம் உள்ளிட்ட மலை மற்றும் வனப்பகுதிகளில் இருந்து வரும் மாணவர்களுக்கு இந்த நிதி வழங்கப்பட்டு வருகிறது.

மாணவர்கள் படிப்பை தவறவிடக்கூடாது. அதே சமயம் காட்டு பகுதியில் இருந்து வரும் மாணவர்கள் வனவிலங்குகளின் தாக்குதலுக்கு உள்ளாகாமல் பாதுகாப்பாக பள்ளி அழைத்து வரவும் இத்திட்டம் செயல்படுத்தப்படுகிறது. இவ்வாறு அவர் கூறினார்.

வடமாநில மாணவர்களுக்குசிறப்பு மையத்தில் கல்வி

காரமடை கல்வி வட்டாரத்தில் பீகார், அசாம், ஒடிசா, கேரள, ஜார்கண்ட் மாநில மாணவர்கள் 78 பேர், 42 பள்ளிகளில் படித்து வருகின்றனர். இவர்களுக்கு வரும் கல்வியாண்டில் என்.ஆர்.எஸ்.டி.சி சிறப்பு மையம் காரமடையில் அமைக்கப்பட உள்ளது. அதில் இம்மாணவர்களுக்கு தமிழ், ஆங்கிலம் மொழிகளில் அடிப்படை அறிவு, பேசுதல், எழுதல் பயிற்சியும், கணக்கு பாடத்தில் அடிப்படை வகுப்புகளும், ஹிந்தி தெரிந்த ஆசிரியர்கள் வாயிலாக நடத்தப்பட உள்ளன.








      Dinamalar
      Follow us