/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
போக்குவரத்து நெரிசல் அதிகரிப்பு; மையத்தடுப்பு அமைக்க கோரிக்கை
/
போக்குவரத்து நெரிசல் அதிகரிப்பு; மையத்தடுப்பு அமைக்க கோரிக்கை
போக்குவரத்து நெரிசல் அதிகரிப்பு; மையத்தடுப்பு அமைக்க கோரிக்கை
போக்குவரத்து நெரிசல் அதிகரிப்பு; மையத்தடுப்பு அமைக்க கோரிக்கை
ADDED : ஜூலை 28, 2025 09:12 PM

வால்பாறை; வால்பாறை நகரில் அடிக்கடி நிலவும் போக்குவரத்து நெரிசலுக்கு நிரந்தர தீர்வு காணும் வகையில், ரோட்டில் மையத்தடுப்பு அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
வால்பாறையில், பொள்ளாச்சி ரோட்டின் இருபுறமும், போக்குவரத்து விதிமுறைகளை மீறி நிறுத்தப்படும் வாகனங்களால், அடிக்கடி போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதோடு, விபத்துக்களும் நடக்கிறது.
இதனால், வால்பாறை மக்கள் நாள்தோறும் அவதிக்குள்ளாகின்றனர். குறிப்பாக, வால்பாறை சுப்ரமணிய சுவாமி கோவில் செல்லும் ரோடு, பழைய பஸ் ஸ்டாண்ட், காந்திசிலை ஆகிய இடங்களில் ரோட்டை ஆக்கிரமித்து அதிகளவில் வாகனங்கள் நிறுத்தப்படுகின்றன.
பொதுமக்களுக்கும் போக்குவரத்துக்கும் இடையூறாக உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற, போலீசாரும் நடவடிக்கை எடுக்காமல் வேடிக்கை பார்க்கின்றனர். இதனால், ஆக்கிரமிப்புகள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றன.
பொதுமக்கள் கூறுகையில், 'வால்பாறையில் கடந்த, 10 ஆண்டுகளுக்கும் மேலாக போக்குவரத்து நெரிசல் தீராத பிரச்னையாக உள்ளது. இதனால் பொதுமக்கள், பள்ளி, கல்லுாரி மாணவர்கள் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.
இந்த பிரச்னைக்கு நிரந்தர தீர்வு காணும் வகையில், வால்பாறை போஸ்ட் ஆபீஸ் முதல் புதிய பஸ் ஸ்டாண்ட் வரை இருக்கும் ஆக்கிரமிப்புக்களை அகற்றி, நெடுஞ்சாலைத்துறை சார்பில் மையத்தடுப்புகள் அமைக்க வேண்டும்,' என்றனர்.