/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
தினசரி மார்க்கெட்டில் காய்கறி வரத்து அதிகரிப்பு
/
தினசரி மார்க்கெட்டில் காய்கறி வரத்து அதிகரிப்பு
ADDED : ஜூலை 27, 2025 09:29 PM
கிணத்துக்கடவு; கிணத்துக்கடவு தினசரி காய்கறி மார்க்கெட்டில் காய்கறி வரத்து அதிகரித்துள்ளது.
கிணத்துக்கடவு தினசரி காய்கறி மார்க்கெட்டில் நேற்று, தக்காளி (15 கிலோ பெட்டி) - 500, தேங்காய் (ஒன்று) - 40, கத்தரிக்காய் - 40, முருங்கைக்காய் - 30, வெண்டைக்காய் - 55, முள்ளங்கி - 20, பூசணிக்காய் - 15, அரசாணிக்காய் - 13, பாகற்காய் - 35, புடலை - 30, சுரைக்காய் - 25, பீர்க்கங்காய் - 45, பீட்ரூட் - 22, வெள்ளரிக்காய் - 25, அவரைக்காய் - 50, பச்சை மிளகாய் - 75 ரூபாய்க்கு விற்பனை ஆனது.
கடந்த வாரத்தைக் காட்டிலும் தற்போது கத்தரிக்காய் - 7, முருங்கைக்காய் மற்றும் முள்ளங்கி - 5, சுரைக்காய் மற்றும் வெள்ளரிக்காய் - 10, பீட்ரூட் - 3 ரூபாய் விலை குறைந்துள்ளது.
மேலும், வெண்டைக்காய் மற்றும் புடலை - 5, பாகற்காய் - 2, பீக்கங்காய் - 10, பச்சை மிளகாய் - 25 ரூபாய் விலை அதிகரித்துள்ளது.
வியாபாரிகள் கூறுகையில், 'காய்கறி மார்க்கெட்டில், ஆடி மாதம் துவங்கிய நாளிலிருந்து அனைத்து காய்கள் வரத்தும் அதிகரித்து வருகிறது. ஒரு சில காய்களின் விலையும் அதிகரிக்க துவங்கி உள்ளது. வரும் நாட்களில் இப்போது இருப்பதை விட கூடுதல் வரத்து இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது' என்றனர்.