/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
காய்கறிகள் வரத்து உயர்வு; விலை சரிவால் ஏமாற்றம்
/
காய்கறிகள் வரத்து உயர்வு; விலை சரிவால் ஏமாற்றம்
ADDED : ஆக 12, 2025 08:53 PM
கிணத்துக்கடவு; கிணத்துக்கடவு தினசரி காய்கறி மார்க்கெட்டில் வரத்து அதிகரித்துள்ளதால், விலை சரிவு ஏற்பட்டது. இதனால், விவசாயிகள் ஏமாற்றமடைந்தனர்.
கிணத்துக்கடவு தினசரி காய்கறி மார்க்கெட்டில் நேற்று தக்காளி (15 கிலோ பெட்டி) --- 450, தேங்காய் (ஒன்று) --- 35, கத்தரிக்காய் கிலோ -- 40, முருங்கைக்காய் --- 30, வெண்டைக்காய் --- 55, முள்ளங்கி --- 25, பூசணிக்காய் --- 14, அரசாணிக்காய் --- 14, பாகற்காய் --- 45, புடலை --- 40, சுரைக்காய் --- 37, பீர்க்கங்காய் --- 48, பீட்ரூட் --- 20, வெள்ளரிக்காய் --- 35, அவரைக்காய் --- 35, பச்சை மிளகாய் --- 55 ரூபாய்க்கு விற்பனையானது.
வியாபாரிகள் கூறுகையில், 'மார்க்கெட்டில் நேற்று அனைத்து காய்கள் வரத்தும் அதிகரித்ததால், விலை சரிவடைந்தது. இதில், தக்காளி (15 கிலோ பெட்டி) - 50, தேங்காய் (ஒன்று) --- 3, கத்திரிக்காய், வெண்டைக்காய், பாகற்காய், பீட்ரூட் மற்றும் வெள்ளரிக்காய் கிலோ - 5 ரூபாய், முள்ளங்கி மற்றும் சுரைக்காய் -- 3, பீர்க்கங்காய் -- 2, அவரைக்காய் -- 30, பச்சை மிளகாய் --- 10 ரூபாய் விலை சரிந்துள்ளது. இதனால், விவசாயிகள் ஏமாற்றமடைந்துள்ளனர்,' என்றார்.