/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
'வாசிப்பு அதிகரித்தால் கற்பனை திறன் வளரும்'
/
'வாசிப்பு அதிகரித்தால் கற்பனை திறன் வளரும்'
ADDED : செப் 05, 2025 10:07 PM

கோவை:
சூலுார் வட்டார அளவிலான இலக்கிய மன்ற போட்டிகளில், கண்ணம்பாளையம் அரசு மேல்நிலைப்பள்ளி மாணவர்கள் வெற்றி பெற்றனர்.
வட்டார அளவிலான இலக்கிய மன்ற போட்டி, செப்., 2ல் துவங்கியது. தமிழ், ஆங்கிலம் மொழிகளில் கதை, கட்டுரை, வினாடி - வினா உள்ளிட்ட போட்டிகள் நடைபெறுகின்றன. இதில், கண்ணம்பாளையம் அரசு மேல்நிலைப்பள்ளியை சேர்ந்த மாணவர்கள், தமிழ் கட்டுரை போட்டியில் 6ம் வகுப்பு மாணவி பவதாரிணி, 8ம் வகுப்பு மாணவி வர்ஷினி, கவிதைப் போட்டியில் 8ம் வகுப்பு மாணவி நந்தினி, ஆங்கில கட்டுரை போட்டியில் 9ம் வகுப்பு மாணவி கீர்த்திகா.
கவிதை போட்டியில் 8ம் வகுப்பு மாணவன் உமேஷ், 9ம் வகுப்பு மாணவன் ருஹிதன், கதை சொல்லுதல் பிரிவில் 6ம் வகுப்பு மாணவி பவதாரிணி, 8ம் வகுப்பு மாணவி ரட்சனா, 9ம் வகுப்பு மாணவி கீர்த்தனா உள்ளிட்டோர் வெற்றி பெற்றனர். தலைமையாசிரியர் செந்துாரன் கூறுகையில், “தமிழ் மட்டுமின்றி, ஆங்கில மொழித்திறனிலும் மாணவர்கள் சிறப்பாகப் பயின்று வருகின்றனர்.
கதை சொல்வதில் தங்கள் திறமையை வெளிப்படுத்தி வருகின்றனர். மாணவர்களிடம் வாசிப்பு பழக்கத்தை ஊக்குவித்து வருகிறோம். வாசிப்பு அதிகரிக்கும்போது கற்பனைத் திறன் வளரும். அதனால், மாணவர்களின் பல்வேறு திறன்கள் மேம்படும் வாய்ப்பு ஏற்படும்,” என்றார்.