தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/ ‘கருவிழி பாதிப்பால் பார்வையிழப்பு உயர்வு’

‘கருவிழி பாதிப்பால் பார்வையிழப்பு உயர்வு’

‘கருவிழி பாதிப்பால் பார்வையிழப்பு உயர்வு’


ADDED : செப் 06, 2026 07:11 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : செப் 06, 2026 07:11 PM


Follow on Google
அ நிறம் | அளவு

கோவை: மாவட்ட கண் பார்வை இழப்பு தடுப்பு சங்கம் மற்றும் அரசு மருத்துவக்கல்லுாரி மருத்துவமனை சார்பில், தேசிய கண்தான விழா அனுசரிக்கப்படுகிறது.

விழாவின் ஒருபகுதியாக, நர்சிங் கல்லுாரி மாணவர்களுக்கு போட்டி நடந்தது. கண்தான முக்கியத்துவம் குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.

அரசு மருத்துவமனையில் இதுவரை 50க்கு மேற்பட்ட விழிகள் தானமாக பெறப்பட்டு, பார்வை இழந்தவர்களுக்கு மறுவாழ்வு அளிக்கப்பட்டுள்ளது.

மாவட்ட கண் பார்வை இழப்பு தடுப்பு சங்க திட்ட மேலாளர் டாக்டர் சரவணன் கூறுகையில், ‘‘இந்தியாவில் கருவிழி பாதிப்பால் பார்வை இழந்தவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இதுசார்ந்த விழிப்புணர்வை அதிகரிக்கவே ஆண்டுதோறும் ஆக.25 முதல் செப்.8 வரை இரு வாரங்கள் கண்தான விழிப்புணர்வு விழா அனுசரிக்கப்படுகிறது,’’ என்றார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us