ADDED : செப் 06, 2026 07:11 PM

குறிச்சி: வீ தி லீடர்ஸ் அமைப்பு சார்பில், நேற்று குறிச்சி குளக்கரையிலுள்ள குப்பை கழிவு அகற்றும் பணி நடந்தது.
காலை 6:30 முதல் 9:00 மணி வரை நடந்த பணியில், பிளாஸ்டிக் பொருட்கள், பாட்டில்கள் என ஒன்றரை டன் கழிவு சேகரிக்கப்பட்டது. 150க்கு மேற்பட்டோர் பங்கேற்றனர். ஏற்பாடுகளை வீ தி லீடர்ஸ் அமைப்பின் ஒருங்கிணைப்பாளர்கள் வசந்தராஜன், சந்திரசேகர் உள்ளிட்டோர் செய்திருந்தனர்.
இருவரும் கூறுகையில், ‘நீர் நிலைகளை காப்பது மக்களின் கடமை. இங்கு கழிவு கொட்டப்பட்டால், நீர் வரத்தும், நிலத்தடியினுள் நீர் செல்வதும் பாதிக்கப்படும். இன்று (நேற்று) சுமார் 500 மீ., துாரம் வரை சேகரிக்கப்பட்ட கழிவில், அதிக மதுபாட்டில்கள் இருந்தது வருத்தத்தை ஏற்படுத்தியது. போலீசார் இப்பகுதியில் ரோந்து சென்று, மது குடிப்போர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்றனர்.
