sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, மார்ச் 27, 2026 ,பங்குனி 13, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கோயம்புத்தூர்

/

 மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கிகளில் அதிகரிக்கும் நெரிசல்

/

 மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கிகளில் அதிகரிக்கும் நெரிசல்

 மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கிகளில் அதிகரிக்கும் நெரிசல்

 மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கிகளில் அதிகரிக்கும் நெரிசல்


ADDED : ஜன 09, 2026 06:23 AM

Google News

ADDED : ஜன 09, 2026 06:23 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

உடுமலை: மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி கிளைகளில், கூட்ட நெரிசல் அதிகரித்துள்ள நிலையில், இணைய தளம் வாயிலாக பணம் வழங்கும் வசதிகயை ஏற்படுத்த வேண்டும், என வலியுறுத்தப்பட்டுள்ளது.

தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கம், கூட்டுறவு பிரிவு மாநில ஒருங்கிணைப்பாளர் குப்புச்சாமி, தமிழக முதல்வர் மற்றும் கூட்டுறவு துறை அதிகாரிகளுக்கு அனுப்பியுள்ள மனு:

கிராமங்களில் செயல்படும் தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கத்தில் வாயிலாக, பயிர்க்கடன் விண்ணப்பித்து, தொகையை எடுக்க விவசாயிகள் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி கிளைகளுக்குச்செல்ல வேண்டியுள்ளது.

இவ்வங்கிகளில், வட்டாரத்திலுள்ள அனைத்து கூட்டுறவு சங்கங்களில் உறுப்பினர்களாக உள்ள ஆயிரக்கணக்கான விவசாயிகள் பணம் எடுக்க வருவதால், கூட்டம் அதிகரிக்கிறது.

மேலும், மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கியில், இதர வரவு செலவுகளும், மகளிர் உரிமைத்தொகை, ஊரக வேலை உறுதி திட்ட பயனாளிகள் பணம் எடுக்க, தனிநபர் கடன், வாகன கடன், மகளிர் சுய உதவி குழு கடன் உட்பட பல்வேறு, வணிக பணிகள் நடந்து வருகிறது.

இதனால், பொதுமக்கள், விவசாயிகள் வட்டாரத்திற்கு ஒன்று உள்ள மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி கிளைகளில் பல மணி நேரம் காத்திருக்கும் நிலை உள்ளது.

பொது மக்கள் மற்றும் விவசாயிகள் நலன் கருதி, அனைத்து மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி கிளைகளிலும், நெப்ட், ஆர்டிஜிஎஸ் ஆகிய நேரடியாக விவசாயிகள் வங்கி கணக்கிற்கு பணம் அனுப்பும் வசதியை ஊக்குவிக்க வேண்டும்.

கிராமப்புற மக்கள் மற்றும் விவசாயிகள் இத்திட்டத்தின் கீழ், பரிமாற்றம் செய்வதற்கு, தனியாக ஒரு அலுவலரை நியமித்து வழிகாட்ட வேண்டும்.

பொது மக்கள், விவசாயிகள் கோரிக்கையை உடனடியாக ஏற்று முதல்வர், கூட்டுறவு சங்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு, தெரிவித்துள்ளார்.






      Dinamalar
      Follow us