ADDED : ஆக 13, 2026 06:52 PM
அ நிறம் | அளவு
வடவள்ளி, ஆக. 14-
வடவள்ளி - மருதமலை சாலை மற்றும் வடவள்ளி - தொண்டாமுத்தூர் சாலையில், சாலையை ஆக்கிரமித்து கடைகள் அமைத்துள்ளதால், போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதோடு, பாதசாரிகளும் சிரமத்திற்கு உள்ளாகின்றனர்.
சாலையோரம் உள்ள தனியார் இடத்தில் ஏராளமான கடைகள் உள்ளன. மூடிய மழைநீர் வடிகாலின் மேல், மக்கள் நடந்து சென்று கொண்டிருந்தனர். இப்போது அங்கும் பொருட்கள், பெயர் பலகைகள் வைத்து ஆக்கிரமித்துள்ளனர். இதனால், பாதசாரிகள் சாலையில் நடக்கின்றனர். சாலை குறுகி, நெரிசல் ஏற்படுவதோடு, விபத்துகள் அதிகரிக்கும் அபாயம் உள்ளது. நெடுஞ்சாலை துறையும் மாநகராட்சியும் இணைந்து ஆக்கிரமிப்புகளை அகற்ற மக்கள் கோருகின்றனர்.
