ADDED : ஆக 13, 2026 06:52 PM
அ நிறம் | அளவு
மலுமிச்சம்பட்டி, ஆக. 14 -
மலுமிச்சம்பட்டி அருகேயுள்ள தனியார் இன்ஜி.. கல்லூரியில் மூன்றாமாண்டு படித்து வந்தவர் அமுதன், 19. கடந்த சில நாட்களுக்க முன் சக மாணவர்கள் தாக்கியதில் உயிரிழந்தார். செட்டிபாளையம் போலீசார் விசாரணையில், அமுதன் உள்ளிட்ட சிலர், நான்காமாண்டு மாணவர்களின் அறையில் புகுந்து, மொபைல்போனை பறித்து வந்துள்ளனர். இது தொடர்பாக ஆறாமுதன் உள்ளிட்ட,14 பேர் கும்பல் அமுதனை தாக்கியது தெரிந்தது.
இதையடுத்து, 17 வயது சிறுவன் உள்பட, ஆறு மாணவர்கள் கைது செய்யப்பட்டனர்.
தொடர்ந்து நேற்று அதே கல்லூரியில் பயிலும், மதுரை, ஓதக்குடியை சேர்ந்த ஶ்ரீராம், 21, லலித் ஆதித்யா, 20 மற்றும் திருநகர் ஹரிஷ் பாண்டியன், 20 ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.
