ADDED : ஆக 13, 2026 06:22 PM
அ நிறம் | அளவு
கோவை: ஸ்ரீ அபிராமி கல்விக் குழுமத்தின் 15வது பட்டமளிப்பு விழா, கோவை, ஈச்சனாரியில் அமைந்துள்ள நர்ஸிங் கல்லுாரி வளாகத்தில் நடந்தது.
விழாவில் முன்னாள் இஸ்ரோ திட்ட இயக்குநர் மயில்சாமி அண்ணாதுரை பேசுகையில்,‘‘வாழ்க்கையில் வெற்றி பெற குழுவாக இணைந்து பணியாற்றுதல் என்ற கொள்கையை கடைப்பிடித்தேன். வெற்றியை அடைய கற்றல், கடின உழைப்பு அவசியம்,’’என்றார்.
விழாவில் சென்னை தமிழ்நாடு செவிலியர் மற்றும் தாதியர் குழுமத்தின் பதிவாளர் டாக்டர் சங்கர் சண்முகம் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார்.
ஸ்ரீ அபிராமி கல்வி நிறுவனங்களின் தலைவர் பெரியசாமி, நிர்வாகிகள் குந்தவி தேவி, செந்தில்குமார், பாலமுருகன், உமாதேவி, சுசரிதா உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.
