தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/ ரேஷன் கடையை சூறையாடிய காட்டு யானை

ரேஷன் கடையை சூறையாடிய காட்டு யானை

ரேஷன் கடையை சூறையாடிய காட்டு யானை


ADDED : ஆக 13, 2026 06:22 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஆக 13, 2026 06:22 PM


Follow on Google
அ நிறம் | அளவு

பெ.நா.பாளையம்: துடியலூர் அருகே கதிர் நாயக்கன் பாளையம் கிராமத்துக்குள் புகுந்த ஒற்றை யானை அங்கிருந்த ரேஷன் கடை கதவை உடைத்து, அரிசி, பருப்பை சேதப்படுத்தியது.

கோவை வடக்கு புறநகர் பகுதிகளில் மலையோர கிராமங்களில் காட்டு யானைகளின் நடமாட்டம் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. யானைகளின் வரவை கட்டுப்படுத்த, பெரியநாயக்கன்பாளையம் வனத்துறையினர் மற்றும் வேட்டை தடுப்பு காவலர்கள் பணியில் ஈடுபடுத்தப்படுகின்றனர். ஆனாலும், யானைகளின் வரவை முழுமையாக தடுக்க இயலவில்லை. கதிர்நாயக்கன் பாளையத்தில் உள்ள ரேஷன் கடையின் இரும்பு கதவை உடைத்து உள்ளே புகுந்த ஒற்றை காட்டு யானை, அங்கிருந்த அரிசி, பருப்பு ஆகியவற்றை வெளியே இழுத்துப் போட்டு சேதப்படுத்தியது. இது குறித்து பெரியநாயக்கன்பாளையம் வனத்துறையினருக்கு பொதுமக்கள் தகவல் தெரிவித்தனர். வனத்துறையினர் ஒற்றை யானையை காட்டுக்குள் விரட்டும் பணியில் ஈடுபட்டனர்.

ஒற்றை யானை தொடர்ந்து இதே பகுதியில் இருப்பதால், அதை வேறு இடத்துக்கு இடமாற்றம் செய்ய வனத்துறையினர் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள், பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us