/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
பெருகும் எப்.எல்.,2 'பார்'கள் 'குடி'மகன்களால் அதிருப்தி
/
பெருகும் எப்.எல்.,2 'பார்'கள் 'குடி'மகன்களால் அதிருப்தி
பெருகும் எப்.எல்.,2 'பார்'கள் 'குடி'மகன்களால் அதிருப்தி
பெருகும் எப்.எல்.,2 'பார்'கள் 'குடி'மகன்களால் அதிருப்தி
ADDED : மார் 12, 2024 10:25 PM
பொள்ளாச்சி:பொள்ளாச்சி நகர் மற்றும் சுற்றுப்பகுதிகளில், நெடுஞ்சாலை ஒட்டியே அதிகப்படியான டாஸ்மாக் கடைகள் செயல்படுகின்றன. இதனை மையப்படுத்தி, தள்ளுவண்டிகளில், பாஸ்புட், மீன் வறுவல் விற்பனை கடைகளும் அமைக்கப்படுவதால், வழித்தடங்களில் போக்குவரத்து நெரிசல் அதிகரிக்கிறது.
இது ஒருபுறமிருக்க, எப்.எல்.,2 என்ற பெயரில் 'பார்' அனுமதி பெறும் சிலர், சாலையை ஒட்டியே கடைகளை திறக்கின்றனர். தவிர, அதிகப்படியான மக்கள் வந்து செல்லும் பகுதிகளில் எப்.எல்., 2 'பார்' அமைக்க அனுமதி வழங்குவதும் மக்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.
சமூக ஆர்வலர்கள் கூறியதாவது:
தொழில், வியாபாரம், கல்வி, மருத்துவம், வேலை உள்ளிட்ட பல்வேறு பணிகளுக்காக செல்லும் மக்களால், பொள்ளாச்சி புது மற்றும் பஸ் பழைய ஸ்டாண்ட் எந்நேரமும் பரபரப்பாக காணப்படுகிறது.
தினமும், காலை மற்றும் மாலை நேரங்களில், பள்ளி மற்றும் கல்லுாரி செல்லும் மாணவ, மாணவியர், வேலைக்கு செல்லும் தொழிலாளர்கள், பெண்கள் என, பலர் வந்து செல்கின்றனர்.
இப்பகுதியில், அதிகப்படியான 'பார்'கள் திறக்கப்பட்டுள்ளன. மக்கள் நெரிசல் மிகுந்த பஸ் ஸ்டாண்டில், 'குடி'மகன்களின் அட்டகாசம் அதிகரித்து வருகிறது. தாறுமாறாக வாகனங்களை ஓட்டுவதால் விபத்து அபாயம் உள்ளது.
இதேபோல, நெடுஞ்சாலையை ஒட்டியும், போக்குவரத்து நெரிசல் மிகுந்த பகுதிகளிலும் எப்.எல்.,2 'பார்' அமைக்க அனுமதி அளிப்பது தவறு. அரசியல் கட்சியினர் மக்கள் நலனில் அக்கறை செலுத்தாமல் பணத்தை பெருக்கும் வகையில் 'பார்' திறப்பது வேதனையாக உள்ளது. இவ்வாறு, அவர்கள் கூறினர்.

