/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
அதிகரிக்கும் விளம்பர பலகைகள்; தூக்கத்தில் மாநகராட்சி அதிகாரிகள் இரும்பு சட்டங்களையும் அறுத்தெடுத்து அகற்ற எதிர்பார்ப்பு
/
அதிகரிக்கும் விளம்பர பலகைகள்; தூக்கத்தில் மாநகராட்சி அதிகாரிகள் இரும்பு சட்டங்களையும் அறுத்தெடுத்து அகற்ற எதிர்பார்ப்பு
அதிகரிக்கும் விளம்பர பலகைகள்; தூக்கத்தில் மாநகராட்சி அதிகாரிகள் இரும்பு சட்டங்களையும் அறுத்தெடுத்து அகற்ற எதிர்பார்ப்பு
அதிகரிக்கும் விளம்பர பலகைகள்; தூக்கத்தில் மாநகராட்சி அதிகாரிகள் இரும்பு சட்டங்களையும் அறுத்தெடுத்து அகற்ற எதிர்பார்ப்பு
ADDED : டிச 19, 2025 05:07 AM

(படங்கள் உள்ளன)
கோவை: தேசிய, மாநில நெடுஞ்சாலைகளின் சந்திப்புகள் மற்றும் திருப்பங்களில் வாகன ஓட்டிகளின் கவனத்தை திசை திருப்பும் வகையில் விளம்பர பலகைகள் வைக்கக்கூடாது. அதை மீறி கோவை மாநகராட்சி பகுதியில், அவிநாசி ரோடு, பொள்ளாச்சி ரோடு, திருச்சி ரோடு, மேட்டுப்பாளையம் ரோடு, செல்வபுரம் ரோடு என அதிக போக்குவரத்துள்ள அனைத்து ரோடுகளிலும் விளம்பர பலகைகள் வைக்கப்பட்டிருக்கின்றன.
அவிநாசி ரோடு மேம்பாலம், காந்திபுரம் மேம்பாலம், டெக்ஸ்டூல் மேம்பாலம், நஞ்சுண்டாபுரம் மேம்பாலம், கவுண்டம்பாளையம் மேம்பாலம் மற்றும் பெரியநாயக்கன்பாளையம் மேம்பாலங்களில் செல்லும்போது வாகன ஓட்டிகளின் கவனத்தை திசை திருப்புகின்றன. சாலை விதிகளின் படி, ரோட்டுக்கு அருகிலும், கட்டடங்களின் மேற்பரப்பிலும் விளம்பர பலகைகள் வைக்கக் கூடாது.
ஆனால், நகர்ப்புற உள்ளாட்சி விதிகளின் படி, விளம்பர பலகைகள் வைக்க மாநகராட்சி அனுமதி அளித்து வருகிறது. சில இடங்களில் அனுமதி எண்களுடன் விளம்பர பலகைகள் வைக்கப்பட்டுள்ளன. பல இடங்களில் அனுமதியின்றி விதிமுறையை மீறி வைக்கப்பட்டு இருக்கின்றன. அவற்றை மாநகராட்சி அதிகாரிகள் அகற்றாமல் இருக்கின்றனர்.
அவிநாசி ரோட்டில் ஹோப் காலேஜில் இருந்து சிங்காநல்லுார் செல்லும் காமராஜ் ரோட்டில் வழிநெடுக விளம்பர பலகைகள் காணப்படுகின்றன. பீளமேடு பஸ் ஸ்டாப் அருகே தென்படுகின்றன. அவிநாசி ரோடு மேம்பாலம் 'ரவுண்டானா' சுற்றுப்பகுதி மற்றும் இருபுறமும் வைக்கப்பட்டிருக்கின்றன. ஆத்துப்பாலம் சந்திப்பில் வாகன ஓட்டிகளின் கவனத்தை சிதறடிக்கும் வகையில் இரு விளம்பர பலகைகள் உள்ளன. ஆத்துப்பாலம் சந்திப்பு, கரும்புக்கடை, குறிச்சி பிரிவு, குறிச்சி குளக்கரை எதிரே உள்ள கட்டடங்களில் அனுமதியற்ற விளம்பர பலகைகள் காணப்படுகின்றன.
சில மாதங்களுக்கு முன், அவிநாசி ரோடு பழைய பாலத்தில் இருந்து ப்ரூக் பீல்ட்ஸ் ரோட்டுக்கு செல்லும் வழித்தடத்தில் வலதுபுறம் இருந்த மூன்று விளம்பர பலகைகள் இரும்பு சட்டங்களை அறுத்தெடுத்து அகற்றப்பட்டன. தற்போது இரும்பு சட்டங்கள் நிறுவி மீண்டும் விளம்பர பலகைகள் வைக்கப்பட்டு உள்ளன.
மாநகராட்சி கமிஷனர் சிவகுரு பிரபாகரன் கவனத்துக்கு கொண்டு செல்லப்பட்டதும், அனுமதியற்ற விளம்பர பலகைகளை அகற்ற நகரமைப்பு பிரிவினருக்கு உத்தரவிட்டுள்ளார்.

