/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
பிளாஸ்டிக் பயன்பாடு அதிகரிப்பு
/
பிளாஸ்டிக் பயன்பாடு அதிகரிப்பு
ADDED : நவ 01, 2024 10:01 PM
பொள்ளாாச்சி; தீபாவளி பண்டிகையால், நகரில், பிளாஸ்டிக் மற்றும் பாலித்தீன் பைகள் பயன்பாடு அதிகரித்ததாக புகார் எழுந்துள்ளது.
பொள்ளாச்சி நகரில், தீபாவளி பண்டிகையை முன்னிட்டு பட்டாசு, புத்தாடை, ஸ்வீட் கார வகைகள் விற்பனை அமோகமாக நடந்தது.
பெரும்பாலும் புத்தாடைகள், பட்டாசு, ஸ்வீட் உள்ளிட்ட அனைத்து பொருட்களும் பிளாஸ்டிக் மற்றும் பாலித்தீன் பைககளில் வழங்கப்பட்டன.
இவற்றில் ஒருமுறை பயன்படுத்தும் பிளாஸ்டிக் பைகளுக்கு, அரசு தடை விதித்துள்ள நிலையில், அதன் பயன்பாடு அதிகரித்தே காணப்பட்டது.
தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் விற்பனை மற்றும் பயன்பாட்டை தடுக்கும் நடவடிக்கைகளில், நகராட்சி அதிகாரிகள் ஈடுபட்டாலும், வியாபாரிகள் அதனை ஒரு பொருட்டாகவே கருதுவதில்லை.
கடைகள் மற்றும் வர்த்தக நிறுவனங்களில் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் இருந்தால், அவற்றை பறிமுதல் செய்வதுடன், கடைக்காரர்கள், வர்த்தக நிறுவன உரிமையாளர்களுக்கு அதிக அபராதம் விதிக்க வேண்டும்.
தன்னார்வலர்கள் கூறியதாவது: தமிழக அரசு, 'மஞ்சப்பை' என்ற பெயரில், பிளாஸ்டிக் பைகளுக்கு மாற்றாக, துணிப்பைகளை பயன்படுத்துவோம் என்ற வகையில், விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறது.
நகராட்சி அதிகாரிகள், சமீபத்தில், நான்கு வாகனங்களில் இருந்து, 3 டன் வரையிலான பிளாஸ்டிக் பொருட்களை பறிமுதல் செய்தனர்.
அதேபோல, நகரில் உள்ள அனைத்து கடைகளில் ஆய்வு செய்து, பிளாஸ்டிக் பயன்பாட்டை தடுக்க வேண்டும்.
இவ்வாறு, அவர்கள் கூறினர்.

