/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
'இன்குபேஷன் மையத்தால் உதிரிபாக உற்பத்தி எளிதாகும்'
/
'இன்குபேஷன் மையத்தால் உதிரிபாக உற்பத்தி எளிதாகும்'
'இன்குபேஷன் மையத்தால் உதிரிபாக உற்பத்தி எளிதாகும்'
'இன்குபேஷன் மையத்தால் உதிரிபாக உற்பத்தி எளிதாகும்'
ADDED : பிப் 25, 2024 12:49 AM
திருப்பூர்;'கல்வி நிறுவனங்களுடன் இணைந்து, 'இன்குபேஷன்' மையங்கள் அமைக்கப்பட்டால், இயந்திர உதிரிபாகங்கள் தயாரிப்பு எளிதாகும்' என, பின்னலாடைத்துறையினர் வரவேற்றுள்ளனர்.
மத்திய ஜவுளித்துறை சார்பில், புதிய தொழில்முனைவோர் மற்றும் புத்தாக்க தொழில்களை ஊக்குவிக்கும் வகையில், 'இன்குபேஷன்' மையம் அமைக்கப்பட்டுள்ளது.
'இன்குபேஷன்' மையம், குறிப்பிட்ட தொழில்துறையின் அடுத்தகட்ட வளர்ச்சிக்கும், முயற்சிக்கும் வழிகாட்டுகிறது.
தற்போது தமிழக அரசு பட்ஜெட்டில், 'நான் முதல்வன்' திட்டத்தில், கல்வி நிறுவனங்களுடன் இணைந்து, இன்குபேஷன் மையம் அமைக்கப்படுமென அறிவிக்கப்பட்டுள்ளது.
திருப்பூர் ஏற்றுமதியாளர் சங்கத் தலைவர் சுப்பிரமணியன் கூறியதாவது:
பின்னலாடை தொழிலில், இறக்குமதி இயந்திரங்களே அதிகளவில் பயன்படுத்தப்படுகின்றன. அவற்றுக்கான உதிரி பாகங்கள் கிடைக்காமல் சிரமம் ஏற்படுகிறது.
திருப்பூர் ஏற்றுமதியாளர்கள், கோவையில் உள்ள, முன்னணி பொறியியல் நிறுவனங்களுடன் ஒப்பந்தம் செய்து, தொழில்நுட்ப மையம் அமைக்க திட்டமிட்டிருந்தோம்.
'நான் முதல்வன்' திட்டத்தில், கல்வி நிறுவனங்களுடன் இணைந்து,'இன்குபேஷன்' மையம் அமைக்கும் அரசு முடிவால், ஒட்டுமொத்த தொழில்துறையினரும் பயனடைவர். இயந்திர உதிரி பாகங்கள் உற்பத்தி எளிதாகும்; புதிய 'சாப்ட்வேர்' வடிவமைப்பும் மேம்படும்.
இவ்வாறு, சுப்பிரமணியன் கூறினார்.