ADDED : ஆக 16, 2025 09:29 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
போத்தனூர்; கோவை, வெள்ளலூர் குளம் அருகேயுள்ள பட்டாம்பூச்சி பூங்கா வளாகத்தில், நாட்டின், 79வது சுதந்திர தின விழா, கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு சார்பில் நடந்தது.
அமைப்பின் ஒருங்கிணைப்பாளர் மணிகண்டன் தலைமை வகித்தார். எழுத்தாளர் இளங்கோவன், தேசிய கொடியேற்றினார். 'நதியின் பிழையன்று' புத்தகத்தின் அறிமுகவுரை குறித்து, சூழல் ஆர்வலர் சிவராம் அய்யாசாமி பேசினார். அமைப்பின் உறுப்பினர்கள். அப்பகுதியினர் பங்கேற்றனர்.