ADDED : ஆக 16, 2026 08:11 PM
காரமடை: நாட்டின் 80வது சுதந்திர தினம் பள்ளி, கல்லூரிகள், உள்ளாட்சி அமைப்புகள் மற்றும் அமைப்புகள் சார்பில் சிறப்பாக கொண்டாடப்பட்டது.
காரமடை டாக்டர் ஆர்.வி., கலை அறிவியல் கல்லூரியில் நடந்த விழாவில், ‘மைம்’ நாடகம் வாயிலாக மாணவிகள் போதைப்பொருள் தீமைகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
கல்லூரி அறங்காவலர் கோபாலகிருஷ்ணன், மேட்டுப்பாளையம் எம்.எல்.ஏ., சுனில் ஆனந்த் கண்டு, கல்லூரி முதல்வர் ரூபா, எஸ்.என்.ஆர்.,டிரஸ்ட் நிர்வாக செயலாளர் சீனிவாசன் உள்ளிட்டோர் கண்டு வியந்து பாராட்டினர்.
* காரமடை எஸ்.வி.ஜி.வி., பள்ளியில் நடந்த விழாவில், ஓய்வு பெற்ற துணை முதன்மை வனபாதுகாவலர் ஜெயராஜ் சிறப்பு விருந்தினராக பங்கேற்றார். அவர் பேசுகையில், இந்தியாவின் சிறப்பே வேற்றுமையில் ஒற்றுமைதான். மாணவர்கள் தங்களது இலக்கை அடைய ஒழுக்கத்தை கடைப்பிடிக்க வேண்டும் என்றார்.
பள்ளி தாளாளர் பழனிசாமி, நிர்வாக அறங்காவலர் லோகு முருகன், முதல்வர் சசிகலா உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
* அன்னூர் அமரர் முத்து கவுண்டர் அரசு மேல்நிலைப் பள்ளியில் நடந்த விழாவில், பேரூராட்சி தலைவர் பரமேஸ்வரன் கொடியேற்றினார்.
சேவைப் பணியில் ஈடுபட்ட 10 மாணவர்கள், அன்னூர் ரோட்டரி சங்கம் சார்பில் கவுரவிக்கப்பட்டனர். தலைமை ஆசிரியர் கீதா, ரோட்டரி சங்கத் தலைவர் சரவணன், பெற்றோர் ஆசிரியர் கழகப் பொருளாளர் நாராயணசாமி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
* நல்ல கவுண்டம்பாளையம் பிரபஞ்ச அமைதி ஆசிரமத்தில் நடந்த விழாவில், குருஜி சிவாத்மா கொடியேற்றினார். அவர் பேசுகையில்,நாம் அனைவரும் ஒன்றிணைந்து போதையை ஒழிக்க வேண்டும், என்றார். போதை ஒழிப்பு உறுதிமொழி ஏற்கப்பட்டது. கலை நிகழ்ச்சி நடந்தது.
* கோவில்பாளையம் அருகே கிரவுன் சிட்டி பேஸ்–1ல் குடியிருப்போர் நலச் சங்கம் சார்பில், 200 பேர் பங்கேற்ற வாக்கத்தான் நடந்தது. முன்னாள் கவுன்சிலர் பொன்னாத்தாள் தேசிய கொடி ஏற்றினார். பேராசிரியர் அனித் பிரேம் மலரவன் சிறப்புரையாற்றினார். கலை நிகழ்ச்சிகள் நடந்தது. சமூக நல்லிணக்க உறுதிமொழி ஏற்கப்பட்டது.
* அன்னூர் பேரூராட்சியில் காந்தி சிலைக்கு மாலை அணிவிக்கப்பட்டது. தேசிய கொடி ஏற்றப்பட்டது. பேரூராட்சி தலைவர் பரமேஸ்வரன், செயல் அலுவலர் கார்த்திகேயன் மற்றும் தூய்மை பணியாளர்கள் பங்கேற்றனர்.
* குரும்பபாளையம், ஸ்ரீ கார்டன் வில்லாஸ் குடியிருப்போர் நலச் சங்கம் சார்பில் நடந்த விழாவில் முன்னாள் ராணுவ வீரர் ஜெயச்சந்திரன் தேசிய கொடியேற்றினார். சங்க துணைத் தலைவர் சாமிநாதன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
* சர்க்கார் சாமக்குளம் பேரூராட்சி அலுவலகத்தில் தலைவர் கோமளவள்ளி கந்தசாமி தேசிய கொடியேற்றினார். துணைத் தலைவர் விஜயகுமார், கவுன்சிலர்கள் ஊழியர்கள் பங்கேற்றனர்.
