ADDED : ஆக 16, 2026 08:00 PM
அ நிறம் | அளவு
கோவைப்புதுார்: கோவைப்புதுார் வாக்கர்ஸ் அண்ட் ரன்னர்ஸ் கிளப் சார்பில், மூத்த குடிமக்களுக்கான நடை, ஓட்ட நிகழ்வு கோவைப்புதுாரில் நேற்று நடந்தது.
ஆரோக்கியமான வாழ்க்கை முறை குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் நோக்கில் நடத்தப்பட்ட இந்நிகழ்வில், 200க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.
காலை 6:15க்கு சாந்தி ஆசிரமத்தில் தொடங்கிய நிகழ்வு 1 கி.மீ., 3 கி.மீ., மற்றும் 5 கி.மீ., என, மூன்று பிரிவுகளில் 9:00 மணி வரை நடந்தது.
மூத்த குடிமக்களுடன் அவர்களது வாரிசுகளும் பங்கேற்றனர். அனைவருக்கும் டி–ஷர்ட் மற்றும் பதக்கம் வழங்கப்பட்டது.
