தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/ களமிறங்காமல் போட்டியிடும் சுயேட்சை வேட்பாளர்கள்

 களமிறங்காமல் போட்டியிடும் சுயேட்சை வேட்பாளர்கள்

 களமிறங்காமல் போட்டியிடும் சுயேட்சை வேட்பாளர்கள்


ADDED : ஏப் 19, 2026 05:02 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஏப் 19, 2026 05:02 PM


Follow on Google
அ நிறம் | அளவு

தொண்டாமுத்தூர்: தொண்டாமுத்தூர் தொகுதியில் போட்டியிட 49 வேட்பாளர்கள், 77 வேட்புமனு தாக்கல் செய்திருந்தனர். 5 அரசியல் கட்சி வேட்பாளர்கள், 16 சுயேட்சை வேட்பாளர்கள் என மொத்தம், 21 வேட்பாளர்கள் இறுதி செய்து சின்னம் ஒதுக்கப்பட்டது.

இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியிடப்பட்டது. அதன்பின் முக்கிய அரசியல் கட்சி வேட்பாளர்களான தி.மு.க., அ.தி.மு.க., த.வெ.க., நா.த.க., வேட்பாளர்கள் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

ஆனால் இதுவரை சுயேட்சை வேட்பாளர்கள் 16 பேர் ஒரு இடத்தில் கூட பிரசாரம் செய்யவில்லை.

அரசியல் வட்டாரத்தினர் கூறுகையில், 'சுயேட்சை வேட்பாளர்கள் பலரும், தி.மு.க., அ.தி.மு.க.,வை சேர்ந்தவர்கள். இது சிதறும் ஓட்டுக்களை மற்ற கட்சிக்கு செல்ல விடாமல் தடுக்க, வழக்கமாக பயன்படுத்தும் உத்தி' என்றனர்.

16 வேட்பாளர்களில் 4 'கார்த்திகேயன்கள்' சுயேட்சை வேட்பாளர்களான அருள்குமார்(சீர்வளி சாதனம்), கலைவாணி - (கண்காணிப்பு கேமரா), ம.கார்த்திகேயன்(கிரிக்கெட் மட்டை), ர.கார்த்திகேயன்(வாயு சிலிண்டர்), ரா.கார்த்திகேயன்(டூத் பிரஷ்), ரா.கார்த்திகேயன்(ஏழு கதிர்களுடன் பேனா முனை), கவுசல்யா(கப்பல்), சிவராமன்(வைரம்), தீபா(பரிசு பெட்டகம்), தேவதாஸ் -(தென்னந்தோப்பு), நிர்மல் குமார்-(கட்டில்), பாலாமணி(டீசல் பம்ப்), மனோகரன்( -கைவண்டி), ரபீக்(தலைக்கவசம்),விஜயா(மின்கல விளக்கு), விஸ்வநாதன்(மோதிரம்)



தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us