ADDED : மார் 22, 2026 04:54 PM

கோவை: சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களுக்கு, இந்தியன் வங்கி சார்பில் கடன் வழங்கும் முகாம் நடந்தது. வங்கியின் செயல் இயக்குனர் அசுடோஷ் சவுத்ரி, குத்து விளக்கு ஏற்றி முகாமை துவக்கி வைத்தார்.
அவர் நிருபர்களிடம் கூறியதாவது:
கோவை கள பொது மேலாளர் அலுவலகத்தின் கீழ் இயங்கும், மண்டலங்கள் வாயிலாக, சிறப்பு முகாம் நடத்தி, சுமார் 1000 கோடி ரூபாய் கடன் வழங்க இந்தியன் வங்கி திட்டமிட்டுள்ளது. டிஜிட்டல் தொழில்நுட்பம் வாயிலாக விரைவாக கடன் வழங்கும் வசதியை அறிமுகப்படுத்தியுள்ளது. வாடிக்கையாளர்கள் வருமான வரி கணக்கு தாக்கல், ஜிஎஸ்டி விவரங்கள் மற்றும் வங்கி கணக்கு அறிக்கை சமர்ப்பித்தால், 30 நிமிடங்களில் கொள்கை அளவில் அனுமதி வழங்கப்படுகிறது. டிஜிட்டல் அனுமதிக்கு பிறகு, வங்கி அதிகாரிகள் கள ஆய்வு செய்து, கடன் அனுமதியை இறுதி செய்வார்கள்.
இவ்வாறு அவர் கூறினார்.
இந்தியன் வங்கி கோவை கள பொது மேலாளர் சுதாராணி, மண்டல மேலாளர்கள் வெங்கட்ரமண ராவ் (கோவை), பாலசுப்ரமணியன் (மதுரை), தாமோதரன்- (திருப்பூர்), அருண் பாண்டியன்- (காரைக்குடி), சேலம் துணை மண்டல மேலாளர் ரூபக் கேஷரி உள்ளிட்டோர் உடனிருந்தனர்.
