ADDED : அக் 12, 2025 12:50 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கோவை:உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி கவாய் மீது செருப்பு வீசியதை கண்டித்து, இந்திய கம்யூ., சார்பில் கோவை பி.எஸ்.என்.எல். அலுவலகம் முன், நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது. வக்கீல் சக்திவேல் தலைமை வகித்தார்.
வக்கீல் சுப்பிரமணியன் பேசுகையில், ''தலைமை நீதிபதி மீது செருப்பு வீசிய செயல் வன்மையாக கண்டிக்கத்தக்கது. நீதிபதியை அவமதிக்கும் நோக்கத்துடன் செயல்பட்டு இருக்கிறார். இதற்கு அரசியல் நோக்கம் இருக்கிறது. நீதிபதிக்கே இந்த நிலை என்றால், சாதாரண மக்களின் நிலையை நினைத்துப் பார்க்க முடியவில்லை. இதை இ.கம்யூ., வன்மையாக கண்டிக்கிறது,'' என்றார்.
இ.கம்யூ., மாநில பொருளாளர் ஆறுமுகம், மாவட்ட செயலாளர் சிவசாமி, ராஜேந்திரன் உள்ளிட்ட 50க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.